செவ்வாய், 13 செப்டம்பர், 2011
நாட்டார் பாடல்கள் நம் உணிர் மூச்சின் பிரவாகங்கள்
அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வீரம் என்பது வறுமையில் அடிபட்டுப் போன வரலாற்றில் நம் சமூகத்தின் விதியும் எழுதப்பட்டதெனவே எண்ணினாலும் நமக்கு நம் எண்ணங்களையும் துக்கங்களையும் ;ஊடகம்; எனும் தற்போதைய இலத்திரனியல் உலகத்திற்கு முன்னால் எல்லாம் இருந்தது இந்த நாட்டுப்புறப்பாடல்கள் தானே!
கரகாட்டம்,கும்மி,மயிலாட்டம்,கோலாட்டம்,ஒயிலாட்டம்,காவடியாட்டம்,பொய்க்கால் குதிரை ஆட்டம்,கைச்சிலம்பாட்டம்,சிலம்பாட்டம்,சக்கை ஆட்டம்,கழைக் கூத்து, தப்பாட்டம்.பொம்மி ஆட்டம் அல்லது பாவைக்கூத்து, பாகவத நடனம்,தெருக்கூத்து, தேவராட்டம், பாம்பாட்டம்,உருமி ஆட்டம். ஒட்டன் கூத்து. காமண் அல்லது காமன் பண்டிகை அல்லது காமன் கூத்து, புலியாட்டம், களியாட்டம்.சேவை ஆட்டம், வில்லுப்பாட்டு என தமிழர் வாழ்வோடு வந்த கலைகளில் நம் நாட்டர் பாடல்களும் தலை நிமிர்ந்தே வாழ்ந்தது எனலாம்.
நாட்டுப்புறப் பாடல்களை நாடோடிப் பாடல்கள் எனவும் பண்ணத்தி என்றும் பல வகைகளில் அழைக்கப்பட்டாலும் ஆய்வுகளில் இவை தனிப்பட்ட அந்தஸ்தை தாமே கொடுத்துவிட்டதாக எண்ணினாலும் தொல்காப்பியம் நாட்டுப் புறப் பாடல்களை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே கணித்துவந்துள்ளதாகவும் கூறுவாருமுளர்.
பல சமயங்களில் இந்த நாட்டார் பாடல்கள் ஒடுக்கப்பட்ட ஏன் அடிமைப்படுத்தப்பட்ட கூலிகளாக வாழ்ந்த சமூகத்தின் எழுச்சிப் பாடல்களாகவும் மலர்ந்து வந்துள்ளமை சிறப்பானதாக இருக்கின்றது.அவர்களின் வலின் குரலாகவும் கலகக் குரலாகவும் சமூதாயத்தின் மீது திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் குரலாகவும் மக்கள் குரலாகவும் ஒலித்து வந்திருப்பதைக் காணலாம்.
உதாரணமா நாம் நம் பரம்பரையில் குழந்தை அழும்போது செல்லமாக பாடும் தாலாட்டு வரிகளிலேயே இந்த அடக்கு முறை தெளிவாகத் தெரிகின்றது.
அத்த அடிச்சாரோ அரளிப்பு தண்ணடாலே
மாமன் அடிச்சானோ மல்லியப்புச் செண்டாலே
என்பது பொதுவான நாட்டார் பாடல். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் அழுகின்றன.ஆனால் ஒன்று நம் அடிமைச் சமூகத்தின் குரல். மற்றையது வர்க்க உரிமைகளை ஆளும் சந்ததியினருடையது. தாசிமாருடைய குரலாய் இங்கு ஒலிக்கும் இந்த தாலாட்டுப் பாடல்கள் அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக அமைவது தான் உண்மை...
முருங்க மரம் வெட்டி
முனி மரத்தில தொட்டிகட்டி
மொதலாளி பெத்த கண்ணே
ஆட்டுங்கம்மா தாசிமாரே
பாழும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்யில – நான்
பால ஆத்துவனா
பாலகன அமத்துவனா
என்கிற இந்த பாடலின் நியாயமும் ஒரு கண்ணீர்காவியமாகவே இருப்பதை எவறாலும் மறுக்க முடியுமா?.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக