மனம் போன போக்கிலே……………..





இயற்கை எப்போதும் நம் மலையகத்திற்கே சொந்தம்.அது அவ்வளவு அற்புதமானது.அழகானது.மனித மனங்களை இதய சுத்தியுடன் வெல்லக் கூடியது.கனத்த இதயங்களையும் அது இதமாய் அழைத்து அரவணைத்து தமதாக்கிக் கொள்ளும்.ஒவ்வொரு அழகான ப+க்களும் நெற்றி வியர்வையை உரமாக்கும்உiழைப்பின் சிகரங்களுக்கு அர்ச்சனைப் ப+க்கள் தான்.இங்கு வைரமான இதயங்கள் மட்டும் உழைப்பினால் எழுந்ததல்ல!அரவணைக்கும் அத்தனை காவல் தெய்வங்களும் இவர்களை உயிராய்க் காத்து நிற்கும்.எல்லைத் தெய்வம்,கருப்பண்ணசுவாமி.வாட்டுமுனி,ரோதமுனி.என்றெல்லாம் தனிக் காட்டிலும்,
சுடுகாட்டு மலை,மேடு என எல்லா இடங்களிலும் பருவ வயதுப் பெண்கள் முதல் குழந்தைப் பேறுக்காகக் காத்து நிற்கும் அனைத்துப் பெண்களை மட்டுமல்ல குழந்தை முதல் பெரியவர்கள் வரை இவைகளே இவர்களின் மூல ஆதாரம்!ஒரு காலத்தில் இந்திய கலாசாரப் பிண்ணனியுடன் வேட்டி.சால்வை,சட்டை எனவும் அதற்கு மேலாக கோட்டை அணிந்து வெள்ளைக்காரர்களுக்கே புதிய கலாசாரம் காண்பித்தது நம் சமூகம்!
ஆனால் என்ன? கல்வியை மட்டும் ஒரு சாராரின் சொத்தாக நம் சமூகம் கை விட்டுப் பொனதன் விவரம் தான் இன்னமும் புரியவில்லை.தேயிலைக் கொழுந்தை கிள்ளி எறிந்து விடுவார்களே என்ற பயம் வெள்ளைக்காரனிடம் இருந்ததால் நம் குழந்தைகள் கல்வியை கரம் பிடிக்க காலம் பல காத்திருந்தார்கள்.
ஒருவேளை நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களின் முதல் நிலைத் தொழிலாளர்களாக விளங்கிய கங்காணிமார் பரம்பரை இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் நம் அன்றைய குழந்தைகள் கல்வியில் தேறியிருப்பார்கள்.இன்று நாம் எனது தாத்தா பேராசிரியர் என்றோ.வைத்தியர் என்றோ,அரசாங்க உத்தியோகத்தர் என்றோ மார் தட்டியிருக்கலாம்.மனம் நினைக்கிறது.காலம் கூட ஒரு வேளை நம்மை ஏமாற்றியிருக்குமோ என்று.....................


...........................................................................

மலையக நாட்டார் பாடல்கள – ஒரு உயிர்பிரவாகத்தின் மூச்சுகள்


நமது சமூகம் அச்சு இலத்திரனியலற்ற ஒரு காலப் பகுதியில் மனம் லயிக்கும் இசையே அவர்களின் பொழுதுபோக்கு!ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற வரிகள் கூட உழைப்பாளிகளின் உழைப்பின் உயர்வுக்காகவே எழுந்துள்ளது.ஒரு சமூகத்தின் எழுச்சி,விடுதலை,துயரம்,சந்தோசம்,ஆறுதல்,முயற்சி எல்லாவற்றையும் கட்டியம் கூறி நின்ற து எம் மலையக நாட்டார்பாடல்கள்.

எமது தமிழலக்கியப் பாரம்பரியத்தில் நாடோடிப் பாடல்கள்,கிராமிய இலக்கியங்கள்,நாட்டுக் கூத்துக்கள்.வாய்மொழி இலக்கியம்,நாட்டார் பாடல்கள் என்பனவை கைகோர்து வளம் சேர்த்துள்ளன.சாதாரண படிப்பறிவில்லாத மொழித் தேர்ச்சியற்ற ஓரு காலத்தில் இசையும் மெட்டும் கூட்டி வார்த்தைகளை வரியாக்கி தாளம் தப்பாமல் கருத்தாழத்துடன் பாடல்களைப் படைத்த பாமரனின் வாழ்க்கை அலாதியானது.ஒவ்வொரு படைப்பும் ஒவு;வொரு செயலும் ஒவ்வொரு நிகழ்வும் இவர்களது எழுதா இலக்கியத்தின் ஒரு மைல் கல்லே!

சினிமா.தொலைக்காட்சி,பத்திரிக்கை,நூல்கள்,பாடசாலை என எதுவுமே ஆதிக்கம் செய்யாத ஒரு காலத்தில் கற்பனையும் காட்சியுமே வாழ்க்கையின் பிரதிபிம்பங்களாக படம்பிடித்துக் காட்டிய பெருமை நம் முன் னோர்க்கு உள்ளது.

சங்கம் வளர்த்து மொழி வளர்த்தவன் நம் தமிழன்!எவ்வித சொல் நெறியும் இல்லாமல் வாழ்வே இசை என வாழ்ந்து எழுதா இலக்கியமாக,வாக்குறுதி,சொல்லுறுதி என வார்த்தையின் திடத்தை வலிமையாக்கி அதனை ஒரு கோர்வையாக்கி நமக்கு அளித்த நம்முன்னோர்கள் கட்டிக்காத்த நாட்டார் பாடலின்பத்தை நாமும் நுகர வேண்டுமல்லவா?சுவைக்க வேண்டுமல்லவா?
சுவைப்போம்....................................