கவ்வாத்தென்ன பிந்துறது?



ஆணும் பெண்ணும் அழகாய்ச் சந்தித்து இன்புறும் காதல்! இதை அழகான ஒரு பக்குவமாக சூழலிலுள்ள சேல்,கோழிகளை உவமித்து சொல்லும் அழகல்ல! காதலினால் தொழிலில் ஏற்படும் அசிரத்தையும் பிந்தும் சிறப்பையும் காட்டும் நாட்டார்பாடல்கள் நயமிக்கவை! இங்கே வரும் பாடலும் தொழிற் சூழலைக் காட்டும் அழகும் கொங்சம் யதார்த்தத்தையும் உணர்த்;துகின்றது!

குத்துக்கட்டை மேலேறி
கொழுந்து வெத்தல போடயில
கைபுடி லேஞ்சு கண்டு என்
கள்ள மனம் துள்ளுதையா

காலிலேயும் வெள்ளி மிஞ்சி
கழுத்திலேயும் தங்கக் காரை
மேலிலேயும் வெள்ளை லேஞ்சு- எனக்கு
வேலை செய்யக் கூடலியே

பனிய லயத்து சாவல்
பாசமுள்ள வெள்ளச் சாவல்
காலு வளர்த்த சாவல்
கண்டாலும் பேசுதில்லை

கவ்வாத்துக் காரப்பையா
கத்திவெட்டும் பாண்டி மன்னா
கத்தி என்ன மின்னுறது.உன்
கவ்வாத்தென்ன பிந்துறது?

முன்னூறு ஆளுக்குள்ள
முள்ளுக் குத்தும் என் சாமி
முள்ளு மூனும் மண்ணுக்குள்ளே
முழிக ரெண்டும் என் மேலே