எங்கய்யாவுக்கு


பள்ளக்கு.......... பாடை.................. இந்த இரண்டில் ஒன்று நாம் உடலை மறக்கும் போது நாலு பேரால் தூக்கப்படும்... ஆனால் பள்ளக்கு? இது உயரிய கௌரவம் கிடைத்தாலும் தூக்கப்படும்.. ஒரு சிலருக்கு மரணத்தின் பின்னரும் தூக்கப்படும். இப்டிப்பட்ட ஒன்றான மரணப்படுக்கையாகிய பள்ளக்கை இந்த நாட்டார்பாடல்கள் வெகு அருமையாகத் தருகின்றன.

மனிதன் இறந்த பின்பு அவனை சுமந்து செல்லும் ஊர்திகள் எத்தனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும் அவருக்குப் புரியுமா என்னஃ அதுபோல இந்தப் பள்ளக்கின் அலங்காரமும் போற்றப்படுகின்றது. அதுவும் உறவுககளால்.. தங்களுடன் வாழ்ந்த ஒரு ஆன்மாவிற்கான இறுதிப் பயத்தில் எப்டியெல்லாம் அலங்காரமிடப்பட்டிருக்கும் என்பதை இந்த எழுதா இலக்கியம் உயிர்த்துடிப்புடன் சொல்கின்றது. பாருங்கள்..........

பல்லக்கு செம்புங்களாம் எங்கப்பாவுக்கு
பளபளக்கும் முத்துக்களாம்
பட்டு பளபளக்குஎங்கய்யாவுக்கு
பல்லக்கு ஆடிவரும்
ஈனாத வாழைகளும் எங்கய்யாவுக்கு
இருபுறமும் ஆடிவரும்
பல்லக்கில் குடையிருக்க
எங்கய்யாவுக்கு பட்டுபோல்
தெரையிருக்க
பல்லாக்க விலை மதிப்பார்
எங்கய்யாவுக்கு
பட்டோலை யார் தருவார்?