ஏரியின்னா ஏரிதாண்டி....

நாட்டுப்புறப் பாடல்கள் பலவிதமான சுசைவள்மிக்கவை. அவை வரம்பில்லாதவை. ஏன் நாக்கில்லை என்றுகூடச் சொல்லலாம் .காதலின்பம் மேலீட்டை மட்டும் இந்தப் பாடல்கள் தரவில்லை. மாறாக களவியின்பத்தின் ;கள்ளக் காதலையும்; தந்தே போயிருக்கின்றன.
சில உணர்வுகள் மனித ஜீவராசிகளின் உண்மையான உணர்வுகளுடன் பேசக் கூடியவை. ஆனால், சில பால்கள் இப்படியும் எழுந்திருப்பதைப் பார்க்கும் போது அது கொஞ்சம் விரசமாக இருந்தாலும் தமிழர் தம் வாழ்வியலில் ஒன்றான உண்மைதான் என்பதற்கு மறுப்பதற்கில்லை.

இங்கு பாருங்கள். ஒரு கள்ளக் காதலின் வரிகளை. ஆன்மீகக் காதல்.தெய்வீகக் காதலுக்கு அப்பால் ஒரு உணர்வுபூர்வமான கள்ளக் காதலையும் நாட்டார் பாடல்கள் விடவில்லை. சுவைத்துப் பாருங்கள்!

ஏரியின்னா ஏரிதாண்டி...
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணே
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருசன் கேட்டு நின்னா-நான்
என்ன பதிலச் சொல்லுறது?

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சுதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்!


காதலே தவறு என்கிறது சமூகம். ஆனால், இந்தக் காதலை இலக்கியங்களில் வரும் கதாகாதிரங்களினூடாக நாம் படித்துச் சுவைத்துக் கொண்டுதானிருக்கின்றோம்.அதே நேரம் காதலிலும் கள்ளக் காதல் என்பது சமூகத்தின் வேண்டாத அல்லது செய்தற்கு ஒவ்வாத செயலாக இருந்தாலும் காதலுக்குக் கண் இல்லை தானே! அதனால் தானே இன்றும் பலர் தம் நிலை இழந்து போயிருக்கிறார்கள்? அடுத்த வாரமும் சுவைப்போம்!