தாய்மை....




ஒரு பெண்ணுக்கு எது பெரிய பேறு? உலகம் தம்மையும் தம் குலத்தையும் பழி சொல்லுக்கு ஆளாக்கிவிடுமோ என எண்ணும் ஒரு தாயுள்ளம்...... ஒரு பிள்ளையிருந்தால் அது என்னுடன் பயணம் செல்லும் போது உடன் வருமல்லவாஃ என எண்ணும் தாயின் உள்ளத்து உருவகம்.... தாய்மை.... அந்த சொல்லின் அருமையை யார் நமக்கு தந்தார்கள்? ஒரு குழந்தை கருவறையிலே உருவாகும் போது தானே அந்த தாய் முழு மதிப்பெண்ணையும் பெறுகின்றாள்!

இங்கே.. இந்த பாடலும் பிள்ளைப் பேறிற்காக ஒரு தாய் எத்தனை எத்தனை தவம் இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் பாருங்கள்........


கிண்ணியிலோ போட்ட சோற்றை கீறித் தின்னப் பிள்ளை இல்லை
ஊருக்குப் போகையிலே உடன்வரப் பிள்ளை இல்லை

பூக்கிற காலத்திலே பூமரிற் போனேனே
காய்க்கிற காலத்திலே காய்மாறிப் போனேனே

எட்டாத கோவிலுக்குத் தூண்டா விளக்கேற்றி
சோதி பரதேசிகளுக்குத் தூமடமும் கட்டி வைத்தேனே

மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ
தேசப் பிறையோ தெவிட்டாத மாங்கனியோ

எங்கள் குலம் மங்காமல் எதிர்குலத்தார் ஏசாமல்
தங்கமலி பொக்கிஸத்தை தானாள வந்த கண்மணியோ?