என் கண்ணே




நாட்டார் பாடல்களில் புராண இதிகாசங்களும் இலக்கியங்களும் படித்தவர்களுக்கு முன்னதாகவே சாதாரண பாமர மக்களைச் சென்றடைந்து அதுவும் இந்த வரலாற்றுக்குரிய இதிகாசங்கள் நாட்டார்பாடலாக மலர்ந்துள்ளமை அவர்களின்பால் உள்ள அறிவுஞானத்தைப் பறைசாற்றுகின்றது.


அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்னு றம் மக்கள் வாழ்க்கையில் இவை பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்துள்ளன. நம் மக்கள் சைவ சமயிகளாகிய மக்களுடன் எப்படி சேர்ந்துள்ளன என்பதைப் பாருங்கள்.....

ஆறுரெண்டும் காவிரியோ
அதன் நடுவே சீரிரங்கமோ
அந்த சீரி ரங்கத்து பாப்பாரெல்லாம்
என் கண்ணே யுனக்குத்
திருநாமம் இட்டாரோ

அண்ணா கவுத்துக்கும்
ஆதிசிவன் வில்லுக்கும்
பட்டுக் கவுத்துக்கும்
பரமசிவன் வில்லுக்கும்
பழுதில்லாம நானிருந்தேன்
இந்தப் பட்டுக் கவுத்துக்கும்
இந்தப் பரமனோட வில்லுக்கும்
பழுது வந்து நேர்ந்ததென்ன?

இப்படிச் செல்லும் இந்தப் பாடல் வரிகளும் நமது மக்கள் புராண இதிகாசங்களையும் இலக்கியங்களையும் அறிந்திருந்தார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.