வியாழன், 11 நவம்பர், 2010

‘காகந் திட்டி மாடு சாகாது’

‘காகந் திட்டி மாடு சாகாது’ என்ற பழமொழி மனித வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்த ஒன்று.அது எப்படி காகத்தால் மாட்டைத் திட்ட முடியுமா? என்பது காதில் கேட்கிறது.ஏன் முடியாது!அது குரலில் ‘கா.. கா...’ என்று கரையாமல் கத்தினால் குரல் வளையில் மாற்றம் ஏற்பட்டால் அது காகத்தின் மொழி தானே! அந்தக் குரலில் அது திட்டலாம் அல்லவா? ஆனால் மாடு? எதனையும் செய்யாத ஒருவனை ‘மாடு’ அல்லது ‘எருமைமாடு’ என்று தானே திட்டுகிறோம்! அப்படியென்றால் காகந் திட்டுவதால் மாடு சாகுமா?
இதுபோல மனிதனுக்கு வரும் ‘பழிச் சொற்கள்’ தான் எத்தனை?எத்தனை? அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் தானே! அதுதான் மாட்டைப்போல கணக்கெடுக்காமல் இருந்துவிட்டால் நம் மீது வரும் பழிச்சொல் கண்டு பயப்படத் தேவையில்லையே! ஆக நாம் சில மனிதர்களிடம் சில நேரம் மாட்டைப்போல இருந்துவிட்டால் இந்தப் பழிச் சொல் நம்மைத் தாண்டி ஓடிவிடும் என்பதும் உண்மைதானே! நாம் வெல்ல,காலத்தை வெல்ல இந்தச் சுழியோடிகளிடமும் தப்பிக்க வேண்டாமா?எனவே,அவ்வப்போது ‘காகந் திட்டி மாடு சாகாது’ என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்! வாழ்வை வெல்லலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக