வியாழன், 29 செப்டம்பர், 2011

நாட்டார்பாடல்கள் உயிர் மூச்சின் பிரவாகங்கள்!




தோட்டப் புறங்களில் தொழிலாளர் வாழ்வில் கொழுந்து என்பது தான் மூலதனம்! அது இல்லாமல் போனால் அவர்களது வாழ்க்கையே இல்லை!ஆனால் இந்தக் கொழுந்தைப் பறிக்கும் முன்னர் அவர்கள் தோட்டத்து துரை,கண்டாக்கு என பலரிடம் சிக்கி படும் அல்லல் தொடர்பாக நாட்டார்பாடல்கள் அழகாகச் சொல்கின்றன.
மிகவும் கஸ்டப்பட்டு வேகாத வெயிலிலும் மழையிலும் கொழுந்து பறித்து அது எவ்வளவு நிறை அதாவது எடை தரும் என ஏக்கத்துடன் தராசையே பார்த்திருந்து அது தான் நினைத்த அளவிற்கு இல்லையே என நினைத்துப் பார்க்கும் பொழுத உழைப்பாளி கணக்குப்புள்ள எனப்படும் கணக்கப்பிள்ளை எவ்வாறு பாடுகிறார்கள் பாருங்கள்!

கல்லாறு தோட்டத்திலே
கண்டாக்கையா பொல்லாதவர்
மொட்டப் புடிங்கிருச்சுன்னு
மூனு ஆல விரட்டிப்புட்டான்
ஓடி நெற புடிச்சி
ஒரு கூட கொழுந்தெடுத்தா
பாவி கணக்குப்புள்ள
பத்து ராத்த போடரானே!
பொழுதும் எறங்கிடுச்சி
பூ மரமும் சாஞ்சிடுச்சி
அன்னும் இரங்கலியே
எசமானே உங்க மனம்!
அவசரமா நான் போரேன்
அரபேரு போடாதீங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக