கட்டுச்சோறு



நம் தழிர்களின் வாழ்வில் கட்டுச்சோறும் சின்னப்பிள்ளைகளின் வாழ்வில் கூட்டாஞ்சோறும் மிகவும் பிரிக்க முடியாத ஒன்றாய் கலந்த ஒரு அம்சமாகும். கதிர்காமம்,மற்றும் பயணம் செல்லும் இடங்களுக்கு கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போவது நம்மில் பிரிக்க முடியாது....

ஒரு சோறு, கருவாட்டுக் கறி, கத்திரிக்காய் குழம்பு.. வாழைக்காய் பிரட்டல், இப்படி ரெண்டு மூன்று சாப்பாட்டு ஐட்டங்களுடன் ஒரு வாழையிலையில் சுற்றி அப்படியே எடுத்துக் கொண்டு..... அல்லது ஒவ்வொரு பானையாக அடுக்குப் பானையாக்கி... அல்லது டிபன் கெரியரில் எடுத்துச் சென்று விளையாட்டுத் திடலிலோ பயணம் செய்யும் இயற்கை இடத்திலோ உட்கார்ந்து ஆறஅமர அதனைப் பிரித்து அதிலிருந்து வரும் கமகம வாசனையோடு....... ச்சா.... என்ன அருமை........ நளமாகம் தோற்றுப் போகும்.... ஆனால்....


இந்த ஏழைகளின் கட்டுச்சோறு.......... அது வெறும் இருக்கும்............. ஆனால் இருக்காது............. கட்டுச் சோறு கட்டுவதற்கு கருவாடு.......? வீட்டில் சின்னப் பிள்ளைகள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு பயணம் செல்வோமே என்று கேட்டுவிடுவார்களோ என்று பயந்து அந்தக் காலத்தில் வானத்தில் இல்லாத வெள்ளைக் காக்கா பறக்குத புர்ர ஏனு;று சொல்லி பிள்ளையின் எண்ணத்தை திசை திருப்பும் அழகு நம் தமிழரின் கற்பனைக்கும் களவுத் மிழுக்கும் புதிய இனிமை தான். கட்டுச்N சாறு பாடலைப் பாருங்கள்......................


காக்காயே காக்காயே
எங்கம்மாவ கண்டிங்களா!
கச்சை கருவாட்டுக்குக்
கையேந்தி நிக்கறிhங்க!
மாங்க பொளப்புக்கு
மாருமேல நிக்கிறாங்க!
தேங்காயப் பொளப்புக்கு
தேருமேல நிக்கிறாங்க!