உறவுகளோடு


கண்ணீர் விட்டுக் கதறும் மனித மனங்களில் பிரிவு என்பது தவிர்க்க முடியாதது என்றாலும் அந்தப் பிரிவை,துயரை உறவுகளோடு கொண்டுகோர்த்து ஒப்பாரியாய் இசைக்கும் பாடல்கள் மனதில் துன்பப் பிரவாகத்தை அள்ளித் தெளிப்பன.
கடந்வார ஒப்பாரியோடு தொடர்ந்து வரும் இந்தப் பாடலின் சங்கதியும் மனதைக் கரைய வைக்கும் ஒரு சுவைதான்.


இட்டு பவென் கட்டுலுல இலுத்தாணி பஞ்சுமெத்த
நீங்க இலுத்தா அழுத்;துமுன்னு - இந்த
இருளடைஞ்ச காட்டுல இருக்க எடம் தேடிட்டீங்களா?

எனும் வரிகளில் ஒளியே இல்லாத இடத்தில் நீங்கள் தனியாய்த் தவிப்பதைப் பொறுக்கமுடியவில்லை என மரணித்த உடலைக் கூட உயிர் உள்ள ஜீவனாய்த் தான் பார்க்கிறது மனம்.
பட்டாலத்து முள்ளுல பணிவாட வீசுதுங்க
இந்த பாலடஞ்ச காட்டுல படுக்க எடம் தேடிட்டிங்களா?
ஐயோ!................ ஐயோ!............................ ஐயோ!....................


என அழுவதும்: புலம்புதுவதும் நம் மக்களின் உறவுகளிலும் சரி:அயலவர் துன்பத்தமிலும் சரி ஆற்hமையின் வெளிப்பாடுகளாக அவை மிதமிஞ்சி வெளியாகியிருப்பதை நன்கு உணரக் கூடியதாகவுள்ளது.