வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மனம் போன போக்கிலே!



மனம் போன போக்கிலே!

எங்கும் புரட்சி! எதிலும் புரட்சி என்றிருந்தது ஒரு காலம்!உலகில் எத்தனையோ புரட்சிகள் மலர்ந்துள்ளன. மனிதன் சந்தித்துள்ள பல்வேறு புரட்சிகள் சவால்களை வென்று வெற்றிக் களிப்பிலும் மிதந்துள்ளன.
இன்றைய மலையகத்திற்கு என்ன அடிப்படையாகத் தேவையாக இருக்கிறது? பசுமைப் புரட்சி, பொருளாதாரப்புரட்சி, அறிவியற் புரட்சி என்றெல்லாவற்றிலும் நமக்கு எது முதன்மையாகப்படுகிறது?
சாதாரண பாமர மக்கள் முதல் உயர் வகுப்பினர் வரை அனைவரும் இன்று முன்வைப்பது நம்மக்களுக்குத் தேவையானது கல்விப் புரட்சி என்பதனைத் தான்.கல்வியை மலையக சமூகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் உயர் நிலையிலேயே முன்னெடுப்பது கண்கூடு. அந்தஸ்து மிக்க நம் சமூகத்தவர்களில் இன்று பலர் சர்வதேசப் பாடசாலைகளில் கூட கல்வியைப் புகட்டுவதைப் பார்க்கின்றோம்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற ஆலமரவிழுதுகள் செய்தியும் இயல்பான ஆற்றல்களை மாணவர் சமூகத்தினரிடம் கட்டி எழுப்புவதும் கல்விச் சிறப்புகளை அடைய வைப்பதும் சிந்தனைப் பொக்கிசங்களை சிதறடிக்காமல் உருவேற்றுவதும் நம் கடமையல்லவா?
கல்விப் புரட்சியில் நம் கால் தடங்கள் நம்பிக்கை மிக்கதாக இருக்க வேண்டும். மாணவர்கிளன் படைப்புலகம் சிறந்த அத்திபாரத்துடன் உருவாக வேண்டும். நமது சமூகத்தின் இன்றைய வளமான தேவையாக எழுத்துலகப் பணியே முன் நிற்கின்றது. சமூகப் பிரக்ஞையுடைய ஒவ்வொரு நம் சமூகத்தினரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான் உண்மை. ஏனெனில் வயிற்றுப் பசியை விட அறிவுப் பசி ஆழமானது.அது மனித கொள்கை, அறியாமை, சுயநலம் என்பவற்றுக்கப்பால் ஆல மர விழுதைப் போன்றது.









மலையக நாட்டார் பாடல்கள் – ஒரு உயிர்பிரவாகத்தின் மூச்சுகள் - 03

மரணம்! அது மனிதன் சந்தித்திராத நாட்களே இல்லை. ஒரு ஜீவன் சதா நம்முடன் கைகோர்த்து வாழ்ந்து நமது சுக துக்கங்களில் பங்கெடுத்து இந்த அழகான ப+மியில் இயற்கை எனும் அன்னையின் மடியில் தவழ்ந்து உழன்று பயின்ற மனிதம் என்ற உறவு இப் புவியிலிருந்து விட்டுப் பிரிகையில் அதனைப் பார்தது; ஒரு துளி கண்ணீரேனும் வடிக்காத மனிதன் இருக்காமலிருக்க முடியாது.எவ்வளவு தான் வரட்டுப் பிடிவாதமும் கௌரவமும் அவனை அழவிடாமல் தடுத்தாலும் கல் நெஞ்சத்தில் ஈரநெஞ்சம் எங்கேயாவது இறந்த உயிரை நினைத்துக் கொண்டால் அங்கே எங்கேயோ மனிதம் வாழுகிறது என்பது தான் பொருள்.
அழுவதும் ஒப்பாரியிடுவதும் கூட விஞ்ஞான ரீதியாக பல்வேறு மன அழுத்தங்களை நம் மனிதில் இருந்து அகற்றிவிடும் என்பதை நம் மூதாதையர்கள் அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்பதால் ஒருவேளை அவர்களுக்குக் கல்விக் கதவுகளும் சரியான முன்னெடுப்புகளும் கிடைத்திருந்தால் இன்று நம்மில் பலர் நாசாவைப் போல கட்டியெழுப்பியிருப்பார்கள்.
மதமும் மத நம்பிக்கையும் வர்ழ்க்கை அமைப்பும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் வாழ்வின் சம்பவங்களை பாடல்காளாகத் தானே தரமுடியும்? அப்படி இழப்புகளுக்காக ஒப்பாரியிடுவது அன்று தொடக்கம் இன்று வரை மலையகத் தாய்மார்களிடையே நிலைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுக்கு அழுவது ஒன்று தானே ஆறுதல்?
அந்த ஆறுதலை, அனுபவத்தாலும் இறந்தவரின் வாழ்க்கைக் குறிப்புகளோடு மீட்டுவது தானே
இறந்த ஆன்மாவிற்கு நம்மால் செய்ய முடிந்த கடமையும் அவர்களது உறவுகளுக்குச் செய்யும் கைமாறும்? நாட்டார் பாடல்களில் இது வெகுவாகவே நம்மவர்களால் அலங்காரமிடப்பட்டுள்ளது.
ஒப்பாரியும் முகாரியும் ஒரு துக்கம் என்றாலும் அதனையும் நாம் சுவைக்க வேண்டுமல்லவா?
சுவைப்போம்....................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக