செவ்வாய், 18 அக்டோபர், 2011

தங்கமே தங்கம்


பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வந்த மலையக மக்களிடையே அந்நியர் ஆட்சிக்காலத்தில் உணவுக்காக ஒவ்வொரு நொடியும் செத்துப் பிழைத்த துன்னபம் எவ்வளவு கொடுமையானது தெரியுமா? நமது பயணம் எந்த வாழ்க்கை மறுமலர்ச்சிக்காக, எந்த சுபீட்சத்திற்காக தொடர்ந்ததோ அது தொடர்ந்து கொண்டேயிருப்பது தான் மிகவும் அவலமான நிலை!

உணவுக்கானப் போராட்டம.. அதுவும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஏற்படும் சோதனை..... இந்தப் பாடல் அதனை அழகாகத் தந்திருக்கின்றது... ஆனால் அதனுள்ளிருக்கும் சோகம்.................? நமது சோகத்தை நாமே பாடிக் கொண்டு மனதை ஆற்றுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கின்றது?


பண்டாவின் ஆட்சியிலே – நாங்கள்
பட்டினியிலே வாடலானானோம்
அதை நினைத்துப் பார்க்கையிலே நெஞ்சம்
பதைபதைக்குதடீ தங்கதே தங்கம்
அரிசியில்ல மாவுமில்ல தங்கமே தங்கம் - நமக்கு
ஆட்டா மாவும் பஞ்சமாக்கி தங்கமே தங்கம்
சோறுமில்ல ரொட்டியில்ல தங்கமே தங்கம்
சோளமாவும் பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
மலைநாட்டு மக்களெல்லாம் தங்கமே தங்கம் - நாங்க
மாண்டு மடிலாமோ தங்கமே தங்கம்? – நாங்க
தரவள்ளியைத் தேடலாமோ தங்கமே தங்கம்
சேந்து மடியலாமோ தங்கமே தங்கம் - நமக்கு
சேமங்கீரை பஞ்சமாச்சி தங்கமே தங்கம்
தட்டுமுட்டுச் சமானெல்லாம் தங்கமே தங்கம் - இங்கே
தவிடுபொடியாச்சுதடி தங்கதே தங்கம்
நம்ம தாலிமணி பறிபோச்சு தங்கமே தங்கம்
ஒரு றாத்தல் பாணுக்குத் தானே தங்கமே தங்கம் - நாம
ஓடியலைஞ்சொமே தங்கமே தங்கம் - நாம ஒரு
யாரு சீத்தைக்குத் தானே தங்கமே தங்கம்
இந்தப் பொல்லாத வாழ்க்க வாழுறம் தங்கமே தங்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக