சனி, 22 அக்டோபர், 2011










நாட்டார் பாடல்களில் அந்தக் காலத்தில் தேயிலைத் தொழிற் சாலைகளில் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் engine ஐ 'இஞ்சிநீரு' என அழைப்பதாய் ஒரு பாடல். இதில் பெண்களையும் அவர்கள் கொழுந்து பறித்தலையும் மிக லாவகமாக எழுதா இலக்கியம் தருவது சுவையானது தான்.எஞ்சினில் வேலை செய்யும் தன் கணவனும் மிகப் பெரிய எஞ்சினியராய் தெரிவது தான் இங்கு அழகான ஒரு விடயம்.
இயந்திரங்களில் உள்ள உபகரணங்களை அதை தொழிலாளர்கள் அடையளப்படுத்தும் விதமும் சற்று வித்தியாசமனது தான். அத்துடன் n தாழிலாளர்கள் எப்போதும் கடுங்குளிரையும் மழையையும் சகித்துக் கொள்வதற்காக அவர்கள் சப்பும் ' வெற்றிலையும்' இப் பாடலில் வருவது சுவைதான்.
நாவல்பிட்டிய கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி ஒன்பதாந்தர மாணவி வி.பவித்ரா இப் பாடலை குறிஞ்சிப் பண்ணைக்காக அனுப்பியிருக்கின்றார். பாடலைப் பாருங்கள்.


இஸ்டோரும் கட்டியாச்சி
இஞ்சிநீம் பூட்டியாச்சி
இளவட்டப் பொண்டுகளா
எலே பொறுக்க வந்திடுங்க

மேரிவளே தோட்டத்திலே
மேக் கணக்கு கண்டாக்கையா
இஞ்சி நீரே தட்டவிட்டு
எலை பொறுக்க நான் வாறேன்

ஆடுதையா இஞ்சிநீரு
அரைக்குதையா செம்புரோதை
ஓடுதையா வாருகளும்
ஒழிஞ்சிருந்து பாருமையா

வெங்கல ரோதையிலே
வேலை செய்யும் என் சாமி
வெத்திலை வேணுமினா
வெளியே வந்து கேளுமையா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக