மீண்டும் என் இலக்கியப் பயணத்தில் இந்தப் பனித் தீவினுள்ளே ஒரு மெல்லியத்
தீப்பந்தத்தை ஏற்றிக் கொண்டு என் பயணத்தை வலைப் ப+க்களினூடாகப் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைவடைகின்றது. இது வெறும் பொழுது போக்குக் கிறுக்கல் அல்ல!
என் இலக்கியப் பயணத்தில் வெளிவந்தவைகளையும் புதிய படைப்புகளையும் இடுகையிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
கொஞ்சம் பொறுங்கள்.நலமாய் சந்திப்போம்! வளமாய் வெல்வோம்!
என் வழிப்பாதை
என் வழிப்பாதையை
ஒரு முறை
திரும்பிப் பார்க்கின்றேன்
எத்தனை
தடம் புரண்ட
அத்தியாயங்கள்!
வெறும் கற்களும்
முற்களும் நிறைந்த
பாதை வழியே
என் பயணம்
பயணித்திருக்கின்றது!
இதற்குள்
எத்தனை வெண் சாமரங்கள்
வீசப்பட்டன
எத்தனை முறை
சாமரை நச்சுக் காற்றுகள்
நசுக்கியிருக்கின்றன!
இந்த
பாதை வழிப் பயணத்தில்
உன் மென் புன்னகைகளும்
ப+க்களாய் மாறி
எனக்குக் கம்பளமாகியபோது
நானும் அசந்தே போயிருக்கின்றேன!
என் நினைவுகள் கூட
இப்போது
என்னிடமில்லை!
நான் எங்கே
வாழ்கிறேன்...........!
நீ தானே
இங்கே வாழ்கிறாய்!
நிஜம்.....!
அடீ.................................
ஆணின் விழா
எலும்புப் பெண்ணே!
என் நாரியில்
எனக்காக எதித்ததுவிட்டு
இப்போது
ஓரங்கட்டிக் கொண்டால்
உருப்படுமா நம் உறவு?
இந்த வாழ்க்கைக்குள்
வாழப் பிறந்த நாம்
வழியிழந்து போகலாமா?
வாழ்க்கை நம்மை
வாழ்வதற்குள்
வாழ்க்கையை நாம்
வாழ்ந்து பார்ப்போம்
வா.....................................
மறையலும்
விடியலும்
வெற்றியும்
தோல்வியும்
நிஜமென்றால்
இந்த
துன்பமும் இன்பமும்
நிஜம் தானே!
பிரிவும் சேர்க்கையும்
உறவே
இனியாவது நாம்
நடந்து வந்த பாதையை
ஒரு முறை
சுத்தப்படுத்துவோம்
கடந்த கால கசப்புகளை
கருவறையிலிருந்து
களையெடுப்போம்!
பகலில் ஜன்னலை
திறப்பதுவும்
இரவில்
மூடிக் கொள்வதும்
நாம் தானே!
புதிய சிந்தனை
புதிய வாழ்க்கைப் பரிணாமம்!
எம் வாழ்வில்
கோடையும்:வசந்தமமும்
வந்தே போனாலும்
வாழ்;க்கை என்பது
வாழத்தானே!
ப+க்கட்டும் இனிய ப+க்கள
கறுகட்டும் கடந்தக் கசப்புகள்
மலரட்டும் வாழ்வின் வசந்தம்
ஊடலும் கூடலும் இருப்பதால் தானே
கடவுளுக்குக் கோயில்!
எனவே
பிரிவும் சேர்க்கையும்
இருப்பதால் தானே
உறவுக்குப் பெருமை!
வாழ்வின் வழியோடு........................
நீ எப்போதாவது
வாழ்ந்திருக்கிறாயா?
ஒரு முறை
என் தாயின் கருவறைக்குள்
வாழ்ந்ததாக ஞாபகம்!
“ஆதலின் இப்போது?”
நான் மானுடர்
உலகிலிருப்பதால்..
“உலகிலிருப்பதால்......”
மனிதக் காற்றுகளை
சுவாசிப்பதால்
வாழவிடுவதில்லை!
“மீள எப்போதாவது வாழ்வதாயா?”
நட்சத்திரங்கள் காணாத
சூரியனை ஒருவேளை கண்டால்........!
“உன் பேனை இப்போதெல்லாம்
அழுவது பற்றி...............”
இதயமே ஓலமிடும்போது
முகாரியின் ஜனனங்கள்
உயிர் மை பேனாவின்
வடிவங்கள்!
ஆசை அலையினால்
அடிபட்டப் புழுக்கள்
“நீ காதலித்திருக்கிறாயா?”
ஒருமுறை
அப்படியென்றால்................................?
இப்போது நிலவை
சொப்பணங்களுக்கு
அழைப்பதில்லை!
“ நீ தோல்வியிலே துவண்டு
போயிருக்கிறாயா.........?”
இல்லை:வைராக்கிய
உணர்வோடு வாழ்க்கையை
வாழ அடிச் சுவடுகளை
தேடியலைகிறேன்
“ காதலைப் பற்றி.”
மனங்களின் கொல்லை
பிணங்களின் வாடை”
தசைகளின் ஆர்ப்பாட்டமான
தேர்த் திருவிழா
“காதலிக்காதவர்கள்!”
இளைஞர்களல்ல
ப+ந்தோட்டத்தில் ப+க்களை
சூடிக் கொள்ளாத
விதவை மனிதக் கூடுகள்
“நாளை என்பது பற்றி.....”
முடியாதவர்களின் சாம்ராஜ்யம்
எதையும் தாங்கும்
மனோ நிலையற்ற மனப் புற்றுக்கள்
“இறுதியாக ஏதாவது”
உன் நேற்றைய அடிச் சுவடே
தெரியாமல் பயணம் தொடரட்டும்
எப்போதாவது யாரையாவது
கண்டால் இப்படிக்கேள்:
வருகிறீர்களா:
வருகிறோம்!
உன் அஸ்த்தமனத்தின் பின்...........................
இப்போதெல்லாம் நான்
துயில்வதே இல்லை!
இரவுகள் என்னை
ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன!
தலையணை கூட
முல்லாய் தைக்கிறது!
வார்த்தைகள் தெளிவாக
வருவதில்லை!
கண்கள் குடங்களாய்
இருக்கின்றன!
மழை எனக்குப்
பெய்வதில்லை!
வசந்தம் என்னை
ஆராதிப்பதில்லை!
கனவுகளில் கூட
எதிரிகளின் தொல்லை!
கற்பனைக்குக் கூட
எதிரிகளின் தொல்லை!
கற்பனைக்குக் கூட
கரிசனை இல்லை!
மழையில் நனைவது
இல்லை:
வெயிலில் குடை
பிடிப்பேன்!
காற்றுக் கூட
என்னைத் தொட
காசு கேட்கிறது!
காதல்
வெண் திரையில்
மைப் பொட்டிட்டு
வேல் விழாக் காணும்
போர்த் தொடுப்புகள்!
விழிகளோடு
வழக்காடினால்
எக்ஸ்ரேயின்
நேர்ப் பிம்பங்கள்!
தூர தரிசனத்தை
வெள்ளை ஒற்றையில்
ஓவியம் கீறும்
கெமராக்கள்!
விழுவதும் எழுவதும்
மீள்வதும் ஆள்வதும்
இவையின் அற்புதங்கள்!
அடிக்கடி மின்னல்கள்
அடிக்கடி துடிப்புகள்
மூடி மூடித் திறக்கும் போது
முத்துக் குளிக்கும்
தரிசனங்கள்!
இவைகள் நியாயப்படுத்த
முடியாத கோட்டுக்காயங்கள்!
நிந்திகலாமோடீ....................................
சிந்திக்காமல்
சந்தித்ததாலோ
என்னவோ
இன்று
சந்தியிலே
சிந்தை கலங்கி
நிற்கிறேன்
அந்திக் கனவுகள்
முந்திக் கொண்டு
பந்தியிலே வரும்போது
நிந்திக்கலாமோடீ
என் நினைவுப் பெண்ணே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக