வெண் திரையில்
மைப் பொட்டிட்டு
வேல் விழாக் காணும்
போர்த் தொடுப்புகள்!
விழிகளோடு
வழக்காடினால்
எக்ஸ்ரேயின்
நேர்ப் பிம்பங்கள்!
தூர தரிசனத்தை
வெள்ளை ஒற்றையில்
ஓவியம் கீறும்
கெமராக்கள்!
விழுவதும் எழுவதும்
மீள்வதும் ஆள்வதும்
இவையின் அற்புதங்கள்!
அடிக்கடி மின்னல்கள்
அடிக்கடி துடிப்புகள்
மூடி மூடித் திறக்கும் போது
முத்துக் குளிக்கும்
தரிசனங்கள்!
இவைகள் நியாயப்படுத்த
முடியாத கோட்டுக்காயங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக