புதன், 28 செப்டம்பர், 2011

தெய்வப் பாடல்கள்


நாட்டார் பாடல்களில் தெய்வப் பாடல்கள் பல இருந்தாலும் இந்திய வம்சாவளித் தோட்ட மக்களிடையே எப்போதும் நின்று நிலைத்து வரும் பாடல்களில் ஒன்றாக முருகனுடையப் பாடல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
முரகன் வள்ளியம்மைப் பாடல்களையும் இங்கு தருவது சாலப் பொருத்தமாகும். நம் மக்களிடையே இந்த முருகன் பாடல்கள் பல கதிர்காமக் கந்தனையொட்டிப் பாடப்படுவதை நாம் காணலாம்.
வருடம் ஒருமுறையாவது அவர்கள் கதிர்காமக் கந்தனை தரிசிக்க குடும்பம் குடும்பமாக ஒன்றுசேர்ந்து பேரூந்துகளிலிலே ஏறி பக்தி மயத்துடன் சென்று அவனை தரிசித்து வரும் அழகே அழகு! அந்நேரம் கேட்கும் 'ஹரோகரா' கோசத்தில் சின்னஞ் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஓரே குரலாய் இசைப்பதில்; குறிஞ்சி முருகனும் உள்ளம் மகிழ்ந்து அவர்களை இன்று வரை துன்ப துயரங்களிலிருந்து விடுவித்து வாழவைத்திருக்கின்றான் என்பது தான் உண்மை.
இப்படி அருள் மழை பொழியும் முருகனின் துணையாள் வள்ளியம்மை பற்றிப் பொருள்படப் பாடும் பாடல்கள் பல உள்ளன.இங்கு வள்ளியம்மை 'சமைதல் அதாவது பருவம் வருதலை நம் இயற் கவிஞர்கள் தம் அழக சற்று வித்தியாசமாக இருந்தாலும் பொருளும் சுவையும் நம் காதுகளுக்கு இனிமையானவைதான்.மாரியம்மன் தாலாட்டில் இப்படியும் ஒரு பகுதி வருவது சுவை தான்.........

திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
பந்தலின் கீழே சிந்து நம் பாடுதடி – அங்கே
கிடக்குதடா முருகா ஆண்டவன் சந்நிதியில்
அதை அள்ளி குடித்தாலும் என்னுடைய ஆவலும் தீருமைய............................
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
வெள்ளிக்கிழமையிலே முருகா வீடு மொழுகையிலே
வேலவர் போவயிலே முருகா வெத்திலை கேட்டாராம்
வெத்திலை கொடுத்திட்டு வள்ளியம்மை
வெரட்டிக் கூடையிலே வெத்திலை முக்காலே
வேலவர் சத்தியம் கூறினாராம்
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
சனிக்கிழமையிலே வள்ளியம்மை சமைந்திருக்கையிலே
தங்கக் குடிசையிலே சாமம் துணையிருந்தாராம்
குங்கும பொய்கையிலே வள்ளிக்குக் குனிந்த கூடாராமா
நீ குந்தியிருந்த இடம் பொன்வள்ளி குங்குமம் வீசுதடி
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
திந்தின தானானே திதனா வெஞ்சிகை முல்லரும்போ
வெஞ்சிகை முல்லரும்போ
வெஞ்சிகை முல்லரும்போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக