வியாழன், 29 செப்டம்பர், 2011

ஆராரோ ஆரிரரோ


உலகில் மனித உறவுகளுக்கு பஞ்சமேயில்லை.அப்பா,அம்மா.பெரியப்பா,பெரியம்மா,மாமா,
அத்தை,சித்தப்பா,சித்தி,பேரப்பிள்ளைகள்,மனைவி,கணவன் என்று இப்படி எத்தனை உறவுகள்?
உறவுகளில் எந்த உறவு மேலானது? எது அளவுகடந்த அன்பைப் பெற்றது? எது பாசமுள்ளது? எது நேசமுள்ளது? எது பிரதிபலன் பார்க்காதது? இந் வினாக்களுக்குள் தான் எத்தனை எத்தனை உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன? அவற்றை உணர்வதால் மாத்திரமே உண்மையை அறிய முடியும்.
எல்லைகளற்ற உறவுகளில் ஒவ்வொரு குடும்பமும் போற்றுகின்ற உன்னதமான உறவுகளில் தாயன்பு என்பது எல்லைகளற்றது.அது பலனை எதிர்பார்க்காதது.அன்பால் பெருக்கெடுத்தது.இந்தத் தாயின் மடியில் உறங்கும் சேயின் விழிகளும் மனமும் எப்படி எல்லாம் லயித்து உறங்கும் என்பதில் வார்த்தைகள் வர்ணிக்கப் போதுமானவை அல்ல!
'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' இது சினிமாப் பாடலின் முதல் வரி தான்.ஆனால் இது ஒரு வேத வாக்கியம். 'ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ!' இந்த வரிகளும் நவீன சினிமாவின் தாக்கமாக இருந்தாளும் மனித வாழ்வில் ' தாலாட்டு' என்பது குழந்தை உறவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
தொகுப்பாளினி தாலாட்டை விளிக்கையில் 'தாய் மடியில் நாம் பிறந்ததற்கு தாயாலே தரப்பட்ட வரவேற்புக் கவிதை இந்தத் தாலாட்டு....................' என தாலாட்டை முகவிரக் கவிதையாக கூறுவதும் தாலாட்டின் பெருமையை நன்கு உணர்த்துகின்றது.அவர் தரும் தாலாட்டு வழமையான பாணியில் இரசம் சொட்டினாலும் வார்த்தைகளின் மேலே சொல்வித்தை கட்டியெழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.
ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

பட்டாலே தொட்டிகட்டி பவுனாலே கயிறு கட்டி
முத்தாலே ஆவுரணம் சாமி முடிப்பாரே ஒங்கமாமா

ஆரடிச்சு நீ அழுதாய் - கண்ணே
அடிச்சார சொல்லியழு – நீ
அழுதா முகம் சோம்பு – நீ
ஆவுன்னா பூ உதிரும்

ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

மருதநேய லேஞ்சிங்களாம் மாமருதப் பட்டுகளாம்
ஒங்க பெரியம்மா கொண்டு வரும் சீதேவியே கண்ணுறங்கு
பட்டு சவுரியதா பல மணியும் சவுரியதா
கட்டி அலங்கரிப்பா கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக