வியாழன், 29 செப்டம்பர், 2011

நடுகைக் களத்தில் காதல் பாடல்கள்


காதல் இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் காதல் என்றவுடன் நம்மில் பெரியவர்கள் பலர் ஏன் இளசுகளும் கூட அதனை ஆண் பெண் உறவாகவே பார்க்கின்றன. ஆனால் இந்தக் காதல் மனித உயிர்களுக்கு அப்பால் விசாலமான ஒன்று! அது மனிதனுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. தாய் சேய் உறவில் கூட இந்தக் காதலில் புலிக் குட்டிக்கு பால் ஊட்டிய மாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இப்படி எத்தனையோ உண்மைகள் உணரப்படாமல் உள்ளன.

ஆனால், வயலில் நாத்து நடும் தொழிற் பாடல்களின் ஒரு கூறாக உள்ள இந்தக் காதல் பாடல்கள் மிகவும் அற்புதமானவை. அதுவும் கொங்சம் விரசம் கலந்த உணர்வு பூர்வமான பாடல்களாக இருந்தாலும் அந்தக் கற்பனை றயம் மிகவும் அழகானவை. காதலன் காதலியிடம் காதலுக்காக தன்னை ஏழையாக உவமித்துத் தரும் அழகே அழகு! சுவைப்பதில் நம் சிந்தனையும் ஏழையாக இருந்தால் தான் இரசழனயும் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள்!


நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே –உன்
தண்டைக் காலு அழகை; கண்டு
கொஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே!பெண்டுகளே!
தண்டு போட் பெண்டுகளே! உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக