Nattarpadalagal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nattarpadalagal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 நவம்பர், 2011

வீமனோட பொண்டாட்டி




தமிழை எழுதி இலக்கியங்களாக வடித்து அவற்றைப் பொக்கிசமாகச் சேர்த்து வைத்த ஒரு பரம்பரையிலிருந்து நம் மலையக தமிழ் மக்கள் சற்றே வேறுபடுகின்றனர். எழுதாமல் அவ்வப்போது தமக்குத் தேவையான விடய்ஙகளை செவி வழியாகச் செவிமடுத்து வாய் மொழிப் பாடலாக அவர்கள் இசைக்கும் பாடல்கள் அழகானவை.

இவர்களது வாழ்வில் வீமனின் கதையும் கர்ணனின் கதையும் வேலனின் கதையும் எப்போதும் பிரிக்கமுடியாத ஒரு வாழ்க்கை நிகழ்வாகவே மாறியிருக்கின்றதை இச்தப் பாடலின் மூலம் அறியலாம்.

காட்டிலேயுள்ள ஆதிவாசியைத் திருமணம் செய்து அகாண்ட வீமன் வேடர் குலத்துப் பெண்ணாகிய வள்ளியை வேலன்................. காப்பியங்களில் தனது வாழ்நாட்களை கடைசிவரை கீழ்த் தட்டு சாதாரண மகனாக வாழ்ந்து வீரனாகவே இறந்து போன ஒரு உன்னத கதாபாத்திரத்தின் கதையை பாடலாக ரசக்கும்போது அதன் உணர்வையும் அழைகையும் ரசிக்க முடியாமல் போகுமா என்ன?

வேரெல்லாம் கண்ணாடி
என் வீமனோட பொண்டாட்டி
வீமனுக்கு வந்த வெள்ளி மதிக்கலியே
வேணுமின்னுத் தேடலியே!

கையெல்லாம் கண்ணாடி
கர்ணனோட பொண்டாட்டி
எங் கர்ணன் மதிச்சாலும்
எங் கர்ணனுக்கு வந்தவ

கள்ளி மதிக்கலியே
காணாமின்னு தேடலியே!

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

அறியாதவன் வாயிலே மண்ணு





நாட்டார் பாடல்களில் புராண இதிகாசங்களும் இலக்கியங்களும் படித்தவர்களுக்கு முன்னதாகவே சாதாரண பாமர மக்களைச் சென்றடைந்து அதுவும் இந்த வரலாற்றுக்குரிய இதிகாசங்கள் நாட்டார்பாடலாக மலர்ந்துள்ளமை அவர்களின்பால் உள்ள அறிவுஞானத்தைப் பறைசாற்றுகின்றது.


அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்னு றம் மக்கள் வாழ்க்கையில் இவை பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்துள்ளன. நம் மக்கள் சைவ சமயிகளாகிய மக்களுடன் எப்படி சேர்ந்துள்ளன என்பதைப் பாருங்கள்.....

ஆறுரெண்டும் காவிரியோ
அதன் நடுவே சீரிரங்கமோ
அந்த சீரி ரங்கத்து பாப்பாரெல்லாம்
என் கண்ணே யுனக்குத்
திருநாமம் இட்டாரோ

அண்ணா கவுத்துக்கும்
ஆதிசிவன் வில்லுக்கும்
பட்டுக் கவுத்துக்கும்
பரமசிவன் வில்லுக்கும்
பழுதில்லாம நானிருந்தேன்
இந்தப் பட்டுக் கவுத்துக்கும்
இந்தப் பரமனோட வில்லுக்கும்
பழுது வந்து நேர்ந்ததென்ன?





இப்படிச் செல்லும் இந்தப் பாடல் வரிகளும் நமது மக்கள் புராண இதிகாசங்களையும் இலக்கியங்களையும் அறிந்திருந்தார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.

சனி, 22 அக்டோபர், 2011

சோலைக் குயிலே


குழந்தைகளைத் துயில வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல! அழும் குழந்தைகளை தன் மடியிலோ மார்பிலோ தோளிலோ வைத்து தாலாட்டுவதும் அதனை அழாமல் இருக்க தாலட்டுப் பாடலை இசைப்பதும் நம் தமிழர்களின் தொன்று தொட்ட வழமை!.
குழந்தையை 'அம்மா' என விளித்து சாய்ந்தாடச் சொல்வது சிறிய குழந்தைகளைக் கூட மதிக்கும் பண்பைச் சிறப்பாய் எடுத்துக் காட்டுகின்றது. குழந்தையையே 'சாய்ந்தாடம்மா' என்பது எவ்வளவு இனிமை! அதை உச்சரித்துப் பார்த்தால் தான் எளிமையும் இனிமையும் புரியும். குழந்தைகளின் மனம் வென்ற இப் பாடல்கள் நம் மனதையும் வெல்லாமலா போகும்? ஒரு முறை ரசித்துப் படித்துப் பாருங்கள்! பாடத் தெரியாத உங்களுக்கும் கூட ராகம் தானாகவே ஓடி வரும்! ஊஞ்சலும் ஒட்டி உறவாடும் உணர்வுகளல்லவா?
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்நதாடு
கோவில் புறாவே சாய்நதாடு

சோலைக் குயிலே சாய்ந்தாடு
தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு'
கற்பகத்தருவே சாய்ந்தாடு



பழய சோறும் திங்கவில்ல


தேயிலைத் தேசத்திற்குள் தேயிலை வருவதற்கு முன்னாள் வந்த கோப்பிப் பயிரின் மலையக நாட்டார் பாடல்கள் தாராளமாகவே உள்ளன. எமது வாழ்க்கையில் நமக்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ தெரியவில்ழல! கோப்பியும் தேயிலையும் நமக்கான மூல வேர்! ஒரு வகையில் நாம் இந்த உலகில் எத்தனை மக்களை தாகசாந்தியைத் தீர்த்து புத்துணர்ச்சியும் கொடுக்கின்றோம்!

நமது விடியற்காலைப் பொழுதில் தோட்டத்தில் தரும் தேயிலையில் ஒரு 'பிளேன் டீ' குடித்துவிட்டு நமது பணி ஆரம்பமாகும். அந்த பிளென் டீயின் விலை என்ன ஒரு பத்து டூபாய் இருக்கும்! ஆனால், நமது உழைப்பினால் வந்த தேயிலை, கோப்பி பாணங்களை ஒரு சிறிய குவளை(சின்ன கிளாஸ்) ஒன்றை பிற தேசத்தினர் 50 டொலருக்கும் நூறு டொலருக்கும் சுவைக்கின்றார்கள்!அதுவும் தரமான 'பச்சைத் தேயிலை'
மூலமாக!

நமக்கு இதையெல்லாயம் ஆய்ந்தெடுப்பதற்கு மட்டுமே உரிமை! சுவைப்பதற்கல்ல! ஆனால் அந்த கோப்பி பயிர் செய்யும் போது வரும் பாடலை சுவைக்க நமக்கு உரிமை இருக்கிறது! ஏன் தெரியுமா? அது நமது உழைப்பு என்பதனால்!


கூணி அடிச்ச மலை
கோப்பிக் கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி!

கோப்பி பழுத்துருச்சி கொண்டு போக நாளாச்சி
சீமத் தொரைகளெல்லாம் சிரிக்கிறாங்க
பழமிருக்கு சாக்குலே பாத்துக்டி பத்தரமா
பசுமாங் கோப்பியிலே பழமெடுக்க நேரமாச்சு!

கங்காணி காட்டு மேலே
கண்டாக்கையா ரோட்டு மேலே
பொடியன் பழமெடுக்க
பொல்லாப்பு நோகுதய்யா!

பழமும் எடுக்கவில்ல
பழய சோறும் திங்கவில்ல
வீட்டுக்குப் போகவில்ல
வேகுதய்யா என் மனசு!

இடுபிலேயும் சாய சீலை
இருபுறமும் கோப்பி மரம்
அவசரமா புடுங்குறாளே
அடுத்த வீட்டு ராமாயி!

இளவட்டப் பொண்டுகளா


நாட்டார் பாடல்களில் அந்தக் காலத்தில் தேயிலைத் தொழிற் சாலைகளில் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நுபெiநெ ஐ 'இஞ்சிநீரு' என அழைப்பதாய் ஒரு பாடல். இதில் பெண்களையும் அவர்கள் கொழுந்து பறித்தலையும் மிக லாவகமாக எழுதா இலக்கியம் தருவது சுவையானது தான்.எஞ்சினில் வேலை செய்யும் தன் கணவனும் மிகப் பெரிய எஞ்சினியராய் தெரிவது தான் இங்கு அழகான ஒரு விடயம்.
இயந்திரங்களில் உள்ள உபகரணங்களை அதை தொழிலாளர்கள் அடையளப்படுத்தும் விதமும் சற்று வித்தியாசமனது தான். அத்துடன் n தாழிலாளர்கள் எப்போதும் கடுங்குளிரையும் மழையையும் சகித்துக் கொள்வதற்காக அவர்கள் சப்பும் ' வெற்றிலையும்' இப் பாடலில் வருவது சுவைதான்.
நாவல்பிட்டிய கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி ஒன்பதாந்தர மாணவி வி.பவித்ரா இப் பாடலை குறிஞ்சிப் பண்ணைக்காக அனுப்பியிருக்கின்றார். பாடலைப் பாருங்கள்.
இஸ்டோரும் கட்டியாச்சி
இஞ்சிநீம் பூட்டியாச்சி
இளவட்டப் பொண்டுகளா
எலே பொறுக்க வந்திடுங்க

மேரிவளே தோட்டத்திலே
மேக் கணக்கு கண்டாக்கையா
இஞ்சி நீரே தட்டவிட்டு
எலை பொறுக்க நான் வாறேன்

ஆடுதையா இஞ்சிநீரு
அரைக்குதையா செம்புரோதை
ஓடுதையா வாருகளும்
ஒழிஞ்சிருந்து பாருமையா

வெங்கல ரோதையிலே
வேலை செய்யும் என் சாமி
வெத்திலை வேணுமினா
வெளியே வந்து கேளுமையா!

திங்கள், 10 அக்டோபர், 2011














நாட்டார் பாடல்களில் சோகங்களையும் அடிமைத் தனத்தையும் உள்ளபடி சொல்வதற்கு மக்கள் பயன்படுத்திய வடிவம் சில வேளைகளில் ஒப்பாரிப் பாடலாகாகவும் இருக்கின்றது. சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது வெறுக்கப்பட்ட ஒர இனமாக இந்தியாவில் தலித்துகள் இருப்பதைக் காணலாம். இவர்களது வாழ்வின் சோகங்கள் எல்லையற்றவை!

தற்போது அந்த நிலையிலிருந்து அவர்கள் சிறிது மாறி வருவதைக் காணலாம். அந்தச் சமூகத்தின் வாழ்க்கையில் குடிநீரைப் பெறுவதற்குக் கூட உள்ள நிலைமையை இப் பாடல் சித்தரிக்கின்றது. சாதாரணமாக நம் ஊரில் உள்ள ஆடு.மாடு,நாய்கள் கூட அருந்தும் குளம்,குட்டை,ஆறு என்பவற்றில் கூட அவர்களுக்கு நீர் அருந்தச் சுதந்திரமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது.


கொடல பொறட்டுதுன்னு – நான்
குடிக்க ஜலம் கேக்கப் போனேன்
குடிக்க ஜலம் இல்லேன்னு
கொளத்துத் தண்ணீர் தூரமின்னான்

வவுத்த பொறட்டுதுன்னு
வடித்த ஜலம் கேட்கப் போனேன்
வடிச்ச ஜலம் இல்லேன்னு – எனக்கு
வாய்க்காத் தூரமின்னான்


மொத்தத்தில் அவனுக்குத் தண்ணீர் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது. உலகின் நாகரீகமாக மிளிரும் மனித இனத்திலும் எத்தனை சாதிக் nஅகாள்கைகள்? தீண்டாமைக் கொள்கைகள்?

நாட்டார் பாடல்களில் சோகங்களையும் அடிமைத் தனத்தையும் உள்ளபடி சொல்வதற்கு மக்கள் பயன்படுத்திய வடிவம் சில வேளைகளில் ஒப்பாரிப் பாடலாகாகவும் இருக்கின்றது. சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது வெறுக்கப்பட்ட ஒர இனமாக இந்தியாவில் தலித்துகள் இருப்பதைக் காணலாம். இவர்களது வாழ்வின் சோகங்கள் எல்லையற்றவை!

தற்போது அந்த நிலையிலிருந்து அவர்கள் சிறிது மாறி வருவதைக் காணலாம். அந்தச் சமூகத்தின் வாழ்க்கையில் குடிநீரைப் பெறுவதற்குக் கூட உள்ள நிலைமையை இப் பாடல் சித்தரிக்கின்றது. சாதாரணமாக நம் ஊரில் உள்ள ஆடு.மாடு,நாய்கள் கூட அருந்தும் குளம்,குட்டை,ஆறு என்பவற்றில் கூட அவர்களுக்கு நீர் அருந்தச் சுதந்திரமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது.


கொடல பொறட்டுதுன்னு – நான்
குடிக்க ஜலம் கேக்கப் போனேன்
குடிக்க ஜலம் இல்லேன்னு
கொளத்துத் தண்ணீர் தூரமின்னான்

வவுத்த பொறட்டுதுன்னு
வடித்த ஜலம் கேட்கப் போனேன்
வடிச்ச ஜலம் இல்லேன்னு – எனக்கு
வாய்க்காத் தூரமின்னான்


மொத்தத்தில் அவனுக்குத் தண்ணீர் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது. உலகின் நாகரீகமாக மிளிரும் மனித இனத்திலும் எத்தனை சாதிக் nஅகாள்கைகள்? தீண்டாமைக் கொள்கைகள்?

வெள்ளி, 7 அக்டோபர், 2011

காதலியைத் தேடி


காதல் ஒரு அழகான:எளிமையான உணர்வு! அதை அறிந்தவனுக்கு அற்புதம்! அறியாதவனுக்கு விரசம் அல்லது காமம்! ஆனால் காதல் வந்தவன் சராசரி மனிதன் ஆகின்றான். இந்தக் காதல் சிறுசு முதல் பெருசு வரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டுத்தான் பார்க்கிறது! அஞ்சுக்கு அம்மாவின் மீது காதல் ஐம்பதுக்கும் காதல்! ஆனால் அது இளசுகளின் மீதல்லவா படர்கிறது!


;சிருங்ஹாரம்' எனும் இந்தக் காதல் இளவயசுக் காதலர்களை மையமாகக் கொண்டு வெளிப்படுத்துகின்றது. தமிழ் இலக்கியப் பாடகர்களிடம் 'எசப்பாட்டு' எனும் பாடலுக்குப் பதில் பாட்டுப் பாடும் உத்தி அந்தக் காலம் முதலே மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்துள்ளமையைக' காணக்கூடியதாக உள்ளது.


ஒரு காதல் நடு நிசியிலே அதாவது இரவிலே தன் காதலியைத் தேடி வருவதாக அவனுக்குச் சொல்கின்றான். அதற்கு மனிதனாக ஒரு காதலனாக வராமல் காட்டு ஜீவராசிகளாக மாறி நான் வேடங் கொண்டு வருவேன் என்கிறான் காதலன்! அதற்குக் காதலியோ அப்படி வரும் தன் காதலனுக்கு அப்படி வருவதைத் தடுக்க எச்பாட்டு மூலம் தரும் வார்த்தைப் பிம்பங்களின் வடிவம் அசத்தலானது! காதல் எதையும் : எப்படியும் செய்ய வைக்கும் என்பதையும் காதல் துணிந்தவனுக்கே சுவர்க்கம் என்பதையும் இந்தச் சிருங்ஹாரப்பாடல் அழகாக நம் காதுகளுக்கு இனிமையாகவும் பொருட் சுவையாகவும் மாறி வருகிறது மகிழ்ச்சிதானே!


ஊரார் உறங்கையிலே
உற்றாருந் தூங்கையிலே
நல்லபாம்பு வேடங்கொண்டு
நடுச்சாமம் வருவாயானால்
ஊர்க்குருவி வேடங்கொண்டு
உயரப்பறந்திடுவேன்!

ஊர்க்குருவி வேடங்கொண்டு
உயரப் பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு
செந்தூக்காய்த் தூக்கிடுவேன்!

வியாழன், 29 செப்டம்பர், 2011

நடுகைக் களத்தில் காதல் பாடல்கள்


காதல் இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் காதல் என்றவுடன் நம்மில் பெரியவர்கள் பலர் ஏன் இளசுகளும் கூட அதனை ஆண் பெண் உறவாகவே பார்க்கின்றன. ஆனால் இந்தக் காதல் மனித உயிர்களுக்கு அப்பால் விசாலமான ஒன்று! அது மனிதனுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. தாய் சேய் உறவில் கூட இந்தக் காதலில் புலிக் குட்டிக்கு பால் ஊட்டிய மாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். இப்படி எத்தனையோ உண்மைகள் உணரப்படாமல் உள்ளன.

ஆனால், வயலில் நாத்து நடும் தொழிற் பாடல்களின் ஒரு கூறாக உள்ள இந்தக் காதல் பாடல்கள் மிகவும் அற்புதமானவை. அதுவும் கொங்சம் விரசம் கலந்த உணர்வு பூர்வமான பாடல்களாக இருந்தாலும் அந்தக் கற்பனை றயம் மிகவும் அழகானவை. காதலன் காதலியிடம் காதலுக்காக தன்னை ஏழையாக உவமித்துத் தரும் அழகே அழகு! சுவைப்பதில் நம் சிந்தனையும் ஏழையாக இருந்தால் தான் இரசழனயும் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும். சுவைத்துப்பாருங்கள்!


நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே –உன்
தண்டைக் காலு அழகை; கண்டு
கொஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே!பெண்டுகளே!
தண்டு போட் பெண்டுகளே! உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

நாட்டார்பாடல்கள் உயிர் மூச்சின் பிரவாகங்கள்!




தோட்டப் புறங்களில் தொழிலாளர் வாழ்வில் கொழுந்து என்பது தான் மூலதனம்! அது இல்லாமல் போனால் அவர்களது வாழ்க்கையே இல்லை!ஆனால் இந்தக் கொழுந்தைப் பறிக்கும் முன்னர் அவர்கள் தோட்டத்து துரை,கண்டாக்கு என பலரிடம் சிக்கி படும் அல்லல் தொடர்பாக நாட்டார்பாடல்கள் அழகாகச் சொல்கின்றன.
மிகவும் கஸ்டப்பட்டு வேகாத வெயிலிலும் மழையிலும் கொழுந்து பறித்து அது எவ்வளவு நிறை அதாவது எடை தரும் என ஏக்கத்துடன் தராசையே பார்த்திருந்து அது தான் நினைத்த அளவிற்கு இல்லையே என நினைத்துப் பார்க்கும் பொழுத உழைப்பாளி கணக்குப்புள்ள எனப்படும் கணக்கப்பிள்ளை எவ்வாறு பாடுகிறார்கள் பாருங்கள்!

கல்லாறு தோட்டத்திலே
கண்டாக்கையா பொல்லாதவர்
மொட்டப் புடிங்கிருச்சுன்னு
மூனு ஆல விரட்டிப்புட்டான்
ஓடி நெற புடிச்சி
ஒரு கூட கொழுந்தெடுத்தா
பாவி கணக்குப்புள்ள
பத்து ராத்த போடரானே!
பொழுதும் எறங்கிடுச்சி
பூ மரமும் சாஞ்சிடுச்சி
அன்னும் இரங்கலியே
எசமானே உங்க மனம்!
அவசரமா நான் போரேன்
அரபேரு போடாதீங்க!

நாட்டார் பாடல்


பொழுது போக்காக நம்மில் பலர் விளையாட்டுக்களை விளையாடுவது உண்டு. சிலரோ உடற்பயிற்சிக்காக விளையாடுவது உண்டு. பலர் பாரம்பரியங்;களுக்காக விளையாடுவது உண்டு. இன்றும் கூட திருமண வீடுகளில் சம்பிரதாயங்களுக்காக பல்லாங்குழிஅ விளையாட்டை விளையாடுவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இப்படியான விளையாட்டுக்களை விளையாடும்போது மகிழ்ச்சிகரமான சூழலை உருவாக்க அக் காலத்தில் நாட்டார் பாடல்களைப் பாடி விளையாடும் அழகு சிறப்பானது. தற்போது கிரிக்கெற் விளையாட்டில் நவீனத்துவமாக 'றம்பெட்' இசையை நாமெல்லாம் கேட்டு ஆனந்தப்படவில்லையா? அதுபோலத்தான் அந்தக்காலத்தில் இந்தப் பாடல்கள் வரவேற்புப் பெற்றன. கிட்டியடித்தல் விளையாட்டில் வரும் பாடலைப் பாருங்கள்!

கவடியடிக்கப் கவடியடிக்கக்
கைகால் முறியக் iகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கிட்டு தேடிக்கிட்டு

மரம்பட்டை மருதம்பட்டை
வௌ;வாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்.

ஆராரோ ஆரிரரோ


உலகில் மனித உறவுகளுக்கு பஞ்சமேயில்லை.அப்பா,அம்மா.பெரியப்பா,பெரியம்மா,மாமா,
அத்தை,சித்தப்பா,சித்தி,பேரப்பிள்ளைகள்,மனைவி,கணவன் என்று இப்படி எத்தனை உறவுகள்?
உறவுகளில் எந்த உறவு மேலானது? எது அளவுகடந்த அன்பைப் பெற்றது? எது பாசமுள்ளது? எது நேசமுள்ளது? எது பிரதிபலன் பார்க்காதது? இந் வினாக்களுக்குள் தான் எத்தனை எத்தனை உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன? அவற்றை உணர்வதால் மாத்திரமே உண்மையை அறிய முடியும்.
எல்லைகளற்ற உறவுகளில் ஒவ்வொரு குடும்பமும் போற்றுகின்ற உன்னதமான உறவுகளில் தாயன்பு என்பது எல்லைகளற்றது.அது பலனை எதிர்பார்க்காதது.அன்பால் பெருக்கெடுத்தது.இந்தத் தாயின் மடியில் உறங்கும் சேயின் விழிகளும் மனமும் எப்படி எல்லாம் லயித்து உறங்கும் என்பதில் வார்த்தைகள் வர்ணிக்கப் போதுமானவை அல்ல!
'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' இது சினிமாப் பாடலின் முதல் வரி தான்.ஆனால் இது ஒரு வேத வாக்கியம். 'ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ!' இந்த வரிகளும் நவீன சினிமாவின் தாக்கமாக இருந்தாளும் மனித வாழ்வில் ' தாலாட்டு' என்பது குழந்தை உறவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
தொகுப்பாளினி தாலாட்டை விளிக்கையில் 'தாய் மடியில் நாம் பிறந்ததற்கு தாயாலே தரப்பட்ட வரவேற்புக் கவிதை இந்தத் தாலாட்டு....................' என தாலாட்டை முகவிரக் கவிதையாக கூறுவதும் தாலாட்டின் பெருமையை நன்கு உணர்த்துகின்றது.அவர் தரும் தாலாட்டு வழமையான பாணியில் இரசம் சொட்டினாலும் வார்த்தைகளின் மேலே சொல்வித்தை கட்டியெழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.
ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

பட்டாலே தொட்டிகட்டி பவுனாலே கயிறு கட்டி
முத்தாலே ஆவுரணம் சாமி முடிப்பாரே ஒங்கமாமா

ஆரடிச்சு நீ அழுதாய் - கண்ணே
அடிச்சார சொல்லியழு – நீ
அழுதா முகம் சோம்பு – நீ
ஆவுன்னா பூ உதிரும்

ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

மருதநேய லேஞ்சிங்களாம் மாமருதப் பட்டுகளாம்
ஒங்க பெரியம்மா கொண்டு வரும் சீதேவியே கண்ணுறங்கு
பட்டு சவுரியதா பல மணியும் சவுரியதா
கட்டி அலங்கரிப்பா கண்மணியே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ – கண்ணே
ஆராரோ ஆரிரரோ

புதன், 14 செப்டம்பர், 2011

ஏய் ஆட்டக்காரா


தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
ஏய் ஆட்டக்காரா
ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக



ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக


வாசலிலே


நாட்டார் பாடல்களில் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதுபோல பக்திக்கும் அது நிறைவாகவே வழிசமைத்துள்ளது. மலையக மக்கள் வாழ்க்கையில் சிறு தெய்வ வழிபாடும் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாக உள்ளதை நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.
நாகராஜ் நிசாந்தினி ;மாரியம்மன் தாலாட்டையும் கும்மியையும்;' அறிமுகம் செய்யும்போது அதை அழகாக இவ்வாறு விழித்துப்போகின்றார்.' படைத்த மனிதனை பக்குவமாய்ப் பாதுகாக்க பாசத்தால் படைத்தான் தாயை....... வளர்ந்த மனிதனை வளமாய் ஆக்கிட வரவழைத்தான் தந்தையை ஆனாலும் கூட ஆண்டவனை மறக்க முடியாது:அவனால் படைக்கப்பட்ட எம்மைப் போன்ற ஜீவன்களுக்கு ........ ஒரு வாய்ப்பாக...' என இதனைக் குறிப்பிடுகின்றார்.

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே

மல்லிக முல்லரும்பா மலராத காயரும்பா
மணந்து மணக்குதிங்க தன்னானே – தானே
மாரியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

செம்புக முல்லரும்பா செவராத காயரும்பா
செவந்து மணக்குதிங்க தன்னானே – தானே
செல்லியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தூண்டாமணி விளக்கு தூண்டத்தான் நின்னெரியும்
தூண்டாட்டியும் நின்னெரியும் தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலில தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலிலே தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே





செவ்வாய், 13 செப்டம்பர், 2011

இயற்கையே வாழ்க்கை!


எழுதா இலக்கியம் என்பதாலோ இந் நாட்டார் பாடல்கள் ஒரு சமூக வழக்கைக் கொண்டிருந்தாலும் அவை பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்டுச் செல்வதைக் காண்க் கூடியதாக உள்ளது. பாடல் வரிகளிலும் கூட அவை மாறி மாறிச் செல்லும் பாங்கும் இருந்தாலும் அது எடுத்தாளப்பட்டுள்ள விதம் மிகவும் சிறப்பானதாய் இருக்கின்றது.
தாலாட்டுப் பாடல்கள் மலையகப் பிரதேசங்களில் முன்னுரிமை பெறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! ஏன் தெரியுமா? கணவன், மனைவி இருவருமே தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றவர்கள்! தேயிலைத் தோட்டங்கள் தான் அவர்களுக்கு வீடு! முருங்கை மரம் தான் நிழல்! வேப்ப மரம் தான் தொட்டில்! பசும் புற்றரைகள் தான் பஞ்சு மெத்தைகள்! கருங்கற் திட்டுகள் தான் குசன் நாற்காலிகள்!அருவிகளும் ஓடைகளும் தான் 'டிஸ்டிலரிஸ் வாட்டர்'.இயற்கையே வாழ்க்கை! இது தானே நம் மக்களின் வாழ்க்கைக் கூடாரம்?
இந்த மக்கள் தம் தொழிலைச் சிறப்பாகச் செய்தாலே உணவு? எனவே தொழிலைச் செய்ய தன் பிளளைகளை உறங்கவைத்துத் தானே ஆகவேண்டும்? இதில் கடல் கடந்து ராமேஸ்வரம் முதரம் மன்னார் வரையும் அத்துடன் ஒவ்வொரு காட்டையும் தேயிலைத் தோட்டங்களாக மாற்ற அவர்கள் ஆற்றிய பணிகள்? அப்பப்பா? மெச்சாதோர் மெச்சாமலே இருக்கட்டும். நாம் நம்மைப் பாராட்டிக் கொள்ளத்தானே வேண்டு;ம்!
இந்த வேலைகளுக்கு மத்தியில் கால் வயிற்றுக் கஞ்சியை பெற்றுக் கொள்ள உழைக்கும் போது பிள்ளைகள் அழுதால் வேலையைச் செய்யத்தான் முடியுமா?
இதோ தன் வேலையையும் செய்ய அதே நேரம் தன் பிள்ளையும் அயர்ந்து தூங்க தாலாட்டுப்பாடல் வருகிறது!அது இதமாய் மனங்களின் மனதை மட்டுமல்ல அந்தக் குழந்தையின் மனதையும் வருடி சுகமாய்த் துயில வைக்கிறது. அந்த மலைக்காற்றின் இதமான காற்றும் வேப்ப மரத்தின் வாசமும் குழந்தையின் நாசிக்கும் தோளுக்கும் இயற்கை தந்த அரும் பெரும் கொடைகளல்லவா?
பாடலைப் பாருங்கள்!

ஆராரோ ஆரிரரோ ஆர் அடிச்சி நீ அழுக
மாமா அடிச்சாரோ மல்லிப்பூ கையாலே
அத்தை அடிச்சாலோ அரிய பூ கையாலே
பாட்டி அடிச்சாரோ பாலூட்டுங் கையாலே
ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

கண்ணுக்கோ கண் எழுதி கடகனுமே மெய' எழுதி
மெய் எழுத மெய் எழுத மயங்கிவரும் நித்திரைகள்
நித்திரை போவாங்கோ கத்தரிப்பூத் தொட்டியிலே
தொட்டிக்குக் கீழ் துணையிருக்கும் மாரியம்மா
மாரி துணையம்மா மகமாயி காவல் அம்மா காலி
துணையிருப்பா காமாச்சி காவலிருப்பா – கண்ணுக்கோ
கண்ணாடி காலுக்கொரு ஈரண்டா ஈரண்டா
விலை மதிக்க வீரனோ உங்க மாமா
ஆர்ஆராரோ ஆரிரிவரோ ஆர் அடிச்சி நீ ஆழக!

மஞ்சள் கிழங்கு வெட்டி மாமே மத்தியானமே
வண்டி கட்டி மஞ்சள் மனக்குதம்மா உங்க
மாமா மகராசா போரா வண்டி இஞ்சி கிழங்கு
வெட்டி உங்க மாமா இளையராஜா போர வண்டி
இஞ்சி மனக்குதம்மா உங்க மாமா இளையராஜா போர வண்டி
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

அன்னக்கிளி போகுதம்மா உனக்குச் சித்த தண்ணி
கொண்டுவர கொஞ்சுங்கிளி போகுதம்மா!
உனக்கு கோபங்கிளி கொண்டு வர மானத்து
மீனோ நீ மேகத்துப் பண்ணீரோ பாலவத்த
தீக்க வந்த தங்க இளநீரோ?
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக
மஞ்சள் கிழங்கு வெட்டி மாமா மத்தியானமோ
வாரானம்மா அல்லி மகளே அருங்கிளியே
பெத்த கண்ணே புள்ளி மகளே நீ புண்ணியரே
பெத்தக் கண்ணே அல்லி பூ வள்ளி ரதுமோ
மகளே மேலவருங்கோ தங்க ரதம் ஏஞ் சொத்து
தவமாய்ப் பெத்து வந்த வந்தவனோ
ஆர் ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக

கண்ணுமணி பொண்ணுமனி கந்தரோடு வேலுமணி
வேலுமணி வேணுமுனு வேண்டித் தவஞ் செய்தேன்.
அம்மா வள்ளினா வள்ளி மணல் மேல படரும்
வள்ளிக் கொடிப் படர்ந்த வள்ளியோடு கூட பொறந்தவனோ
ஆர் ஆராஆரோ ஆர் அடிச்சி நீ அழுக?
தாலாட்டு இடம் பொருள் பார்த்துச் சுவைக்காக எழுதப்பட்ட இலக்கியமல்ல! அது நம் வாழ்க்கையில் மக்களுடன் ஒட்டி உறவாடிய ஒரு அழகான இசைப் பேரின்பம்! செலவில்லாமல் அது ஒரு சுகப் பயணம்! காலத்தின் நம்பிக்கையான அடித்தளம் இந்த நாட்டுப்பாடல்கள்!

தாய் மடியில் பிறந்து


மனிதன் பிறக்கும் போதும் அழுகின்hன்:இறக்கும் போதும் அழுகின்றான்! மறைந்த சந்திரபாபுவனி; குரலில் அழுத்தமான சிந்தனைகள். ஒரு விடயத்தை மனிதன் அதிகமாகக் கவரும் ஊடகத்தில் சொல்லிவிடுவது இலகுவானது!
அந்தக் காலத்தில் அறிவியல் உலகம் மனிதனை ஆக்கிரமித்துக் கொள்ளாத வேலையில் ஓய்வு நேரங்களையும்: உழைப்பு நேரங்களையும்: துயர நேரங்களையும் என தன் வாழ்வியலோடு அவன் எழுதா இலக்கியமான நாட்டார் பாடல்களை இலாவகமாகக் கையாண்டான்! இப் பாடல்களில் மனிதனின் வாழ்வில் நிலையாமையாகிய இவ் உடம்பு பிரியும்போது அவன் உறவுகள் படும் துயரங்களை 'ஒப்பாரிப் பாடல்களினூடாக' அவன் - அவள் -அவர்கள் தரும் பாடல்கள் இனிமையானவை என்பதை விட ஆழமான துயரங்களின் சாகரங்கள்!
செல்வி.நாகராஜ் நிசாந்தினியின் தொகுப்பில் ஒப்பாரிப் பாடல்களை 'தாய் மடியில் பிறந்து தாலாட்டு கேட்ட எம்மை அழைக்கிறான் தேவன்- அவன் உறவுகளை விட்டுச் செல்ல உடைழந்த மனதின் முடிவுரையாக அமைகின்றது இந்த ஒப்பாரி........................' முகவுரை தந்திரும் தொகுப்பாளினி இன்னும் நிறைய பாடல் தொகுப்புகளைத் திரட்டி மக்கள் கவனத்திற்குக் குறிஞ்சிப் பண்ணையினூடாகக் கொண்வரலாம்.
இங்கு பாருங்கள்!ஒப்பாரியில் அழகியல் நயத்தை! இதில் தான் எத்தனை தமிழ் நயம்? காலம் இளம் சிட்டுகளை இதில் லயிக்க வைக்காவிட்டாலும் இளம் சமூகத்தினரிடையே இப் பாடல்களும் அக்கால மக்களின் வாழ்க்கைச் சுவையையும் ரசித்து சுவைக்க வேண்டும்!

ஆசக்கி இளந்தோட்டம் - நம்ம வாச
ஆளில்லா பூந்தோட்டம்
அரும்பொடிக்கப் போகயில
ஒரு அழகு ரதம் கண்டியலா?

முருங்க இளந்தோட்டம் - நம்ம வாச
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
பூவொடிக்க போகயில
ஒரு பொண்ணு ரதம் கண்டியலா?
பொல்லாத எமனோட – நீங்க
போக வரம் கேட்டியலா?

என்ன அழச்சிகிட்டு




நம் மக்களின் வாழ்க்கை ஒரு நீண்ட பயணம் கொண்டது. ஒரு காலத்தில் இந்தியாவில் தென்னகத்தில்காணப்பட்ட வறுமை! நமது வாழ்வியலையே முற்றிலும் மாற்றியமைத்தது. உழைப்பிற்காக நாம் அழைக்கப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால், வாழ்வதற்காக நாம் வந்த பயணம்1 இன்றும் வரலாற்றுக் கறைகளாக! துயர்படிந்த அத்தியாயங்களாக! இருப்பது நம்மில் இளவட்டங்களுக்கு, ஏன் பல பெரியவர்களுக்கே தெரியாது. உலகம் போற்றும் திரைப்படமாக விளங்கிய 'டைட்டாணிக்' கப்பல் படம் நமக்கு ஒரு காவியம். அதுவும் உண்மைக் காவியம்!

ஆனால், நம் உறவுகளுக்கு ஒரு 'ஆதிலெட்சுமி' கப்பல் பயணம் யாருக்குத் தெரியும்! ஆயிரக் கணக்கான உயிர்களை கடலிலேயே காவு கொண்ட எமன! உழைப்பிற்காக மரணமான சரித்திரம்! எத்தனை உயிர்கள் இந்த மலையகத்தை நோக்கிப் பயணிக்கும் போதே நடுக் காடுகளில் மரணித்த அவலம். இந் அவலங்களையும் நாட்டார் பாடல்கள் சுவையாகத் தந்திருக்கின்றன.

இந்த வகையில் உறவுகளின் பிரிவுகளை, உண்மை அன்பின் வெளிப்பாடுகளை, இல்லற உணர்வின் அன்பை எப்படி இந்தப் பாடலில் வெளிப்படுகின்றது என்று பாருங்கள்!

பொழக்கத்தான் நாம வந்து
இன்னும் பூமி போய் சேரலியே
கடன கட்ட வந்து – நாம
கண்டி போய் சேரலியே
பாதி வழியில ஏன் ராசாவே
பரலோகம் போயிட்டீங்க
இனியும் நாம் போயி
இங்க என்ன செய்வேனோ
என்ன அழச்சிகிட்டு
ஏ ராசாவே போயிடுங்க


ஆம் பிரிவுத் துயரில் இந்தப் பேதையும் அவனது இறுதிப் பயணத்தில் இணைந்து கொள்ள விரும்புவதும் ஒரு உண்மை அன்பின் வெளிப்பாடல்லவா?











நாட்டார் பாடல்கள் நம் உணிர் மூச்சின் பிரவாகங்கள்




அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வீரம் என்பது வறுமையில் அடிபட்டுப் போன வரலாற்றில் நம் சமூகத்தின் விதியும் எழுதப்பட்டதெனவே எண்ணினாலும் நமக்கு நம் எண்ணங்களையும் துக்கங்களையும் ;ஊடகம்; எனும் தற்போதைய இலத்திரனியல் உலகத்திற்கு முன்னால் எல்லாம் இருந்தது இந்த நாட்டுப்புறப்பாடல்கள் தானே!

கரகாட்டம்,கும்மி,மயிலாட்டம்,கோலாட்டம்,ஒயிலாட்டம்,காவடியாட்டம்,பொய்க்கால் குதிரை ஆட்டம்,கைச்சிலம்பாட்டம்,சிலம்பாட்டம்,சக்கை ஆட்டம்,கழைக் கூத்து, தப்பாட்டம்.பொம்மி ஆட்டம் அல்லது பாவைக்கூத்து, பாகவத நடனம்,தெருக்கூத்து, தேவராட்டம், பாம்பாட்டம்,உருமி ஆட்டம். ஒட்டன் கூத்து. காமண் அல்லது காமன் பண்டிகை அல்லது காமன் கூத்து, புலியாட்டம், களியாட்டம்.சேவை ஆட்டம், வில்லுப்பாட்டு என தமிழர் வாழ்வோடு வந்த கலைகளில் நம் நாட்டர் பாடல்களும் தலை நிமிர்ந்தே வாழ்ந்தது எனலாம்.

நாட்டுப்புறப் பாடல்களை நாடோடிப் பாடல்கள் எனவும் பண்ணத்தி என்றும் பல வகைகளில் அழைக்கப்பட்டாலும் ஆய்வுகளில் இவை தனிப்பட்ட அந்தஸ்தை தாமே கொடுத்துவிட்டதாக எண்ணினாலும் தொல்காப்பியம் நாட்டுப் புறப் பாடல்களை இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே கணித்துவந்துள்ளதாகவும் கூறுவாருமுளர்.

பல சமயங்களில் இந்த நாட்டார் பாடல்கள் ஒடுக்கப்பட்ட ஏன் அடிமைப்படுத்தப்பட்ட கூலிகளாக வாழ்ந்த சமூகத்தின் எழுச்சிப் பாடல்களாகவும் மலர்ந்து வந்துள்ளமை சிறப்பானதாக இருக்கின்றது.அவர்களின் வலின் குரலாகவும் கலகக் குரலாகவும் சமூதாயத்தின் மீது திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் குரலாகவும் மக்கள் குரலாகவும் ஒலித்து வந்திருப்பதைக் காணலாம்.

உதாரணமா நாம் நம் பரம்பரையில் குழந்தை அழும்போது செல்லமாக பாடும் தாலாட்டு வரிகளிலேயே இந்த அடக்கு முறை தெளிவாகத் தெரிகின்றது.

அத்த அடிச்சாரோ அரளிப்பு தண்ணடாலே
மாமன் அடிச்சானோ மல்லியப்புச் செண்டாலே


என்பது பொதுவான நாட்டார் பாடல். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் அழுகின்றன.ஆனால் ஒன்று நம் அடிமைச் சமூகத்தின் குரல். மற்றையது வர்க்க உரிமைகளை ஆளும் சந்ததியினருடையது. தாசிமாருடைய குரலாய் இங்கு ஒலிக்கும் இந்த தாலாட்டுப் பாடல்கள் அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக அமைவது தான் உண்மை...

முருங்க மரம் வெட்டி
முனி மரத்தில தொட்டிகட்டி
மொதலாளி பெத்த கண்ணே
ஆட்டுங்கம்மா தாசிமாரே
பாழும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்யில – நான்
பால ஆத்துவனா
பாலகன அமத்துவனா

என்கிற இந்த பாடலின் நியாயமும் ஒரு கண்ணீர்காவியமாகவே இருப்பதை எவறாலும் மறுக்க முடியுமா?.









நாட்டுப்புறப் பாடல்கள்


நாட்டுப்புறப் பாடல்கள் பலவிதமான சுசைவள்மிக்கவை. அவை வரம்பில்லாதவை. ஏன் நாக்கில்லை என்றுகூடச் சொல்லலாம் .காதலின்பம் மேலீட்டை மட்டும் இந்தப் பாடல்கள் தரவில்லை. மாறாக களவியின்பத்தின் ;கள்ளக் காதலையும்; தந்தே போயிருக்கின்றன.
சில உணர்வுகள் மனித ஜீவராசிகளின் உண்மையான உணர்வுகளுடன் பேசக் கூடியவை. ஆனால், சில பால்கள் இப்படியும் எழுந்திருப்பதைப் பார்க்கும் போது அது கொஞ்சம் விரசமாக இருந்தாலும் தமிழர் தம் வாழ்வியலில் ஒன்றான உண்மைதான் என்பதற்கு மறுப்பதற்கில்லை.

இங்கு பாருங்கள். ஒரு கள்ளக் காதலின் வரிகளை. ஆன்மீகக் காதல்.தெய்வீகக் காதலுக்கு அப்பால் ஒரு உணர்வுபூர்வமான கள்ளக் காதலையும் நாட்டார் பாடல்கள் விடவில்லை. சுவைத்துப் பாருங்கள்!

ஏரியின்னா ஏரிதாண்டி...
ஏரி நான் உலுக்கரண்டி-பெண்ணே
தாவி என்ன புடிச்சுகிடி

தாவி நல்லா புடிச்சேனே மாமா
கை வளையல் சேதமாகும்
என் புருசன் கேட்டு நின்னா-நான்
என்ன பதிலச் சொல்லுறது?

குனிஞ்சு சாணி அள்ளயிலே
வெறகு ராட்டி தட்டயிலே
தவறிட்டு உடைஞ்சுதின்னு
தந்திரமா சொல்லியழுதேன்!
காதலே தவறு என்கிறது சமூகம். ஆனால், இந்தக் காதலை இலக்கியங்களில் வரும் கதாகாதிரங்களினூடாக நாம் படித்துச் சுவைத்துக் கொண்டுதானிருக்கின்றோம்.அதே நேரம் காதலிலும் கள்ளக் காதல் என்பது சமூகத்தின் வேண்டாத அல்லது செய்தற்கு ஒவ்வாத செயலாக இருந்தாலும் காதலுக்குக் கண் இல்லை தானே! அதனால் தானே இன்றும் பலர் தம் நிலை இழந்து போயிருக்கிறார்கள்?

வெள்ளி, 10 செப்டம்பர், 2010




நமது சமூகம் அச்சு இலத்திரனியலற்ற ஒரு காலப் பகுதியில் மனம் லயிக்கும் இசையே அவர்களின் பொழுதுபோக்கு!ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்ற வரிகள் கூட உழைப்பாளிகளின் உழைப்பின் உயர்வுக்காகவே எழுந்துள்ளது.ஒரு சமூகத்தின் எழுச்சி,விடுதலை,துயரம்,சந்தோசம்,ஆறுதல்,முயற்சி எல்லாவற்றையும் கட்டியம் கூறி
நின்றது எம் மலையக நாட்டார்பாடல்கள்.

எமது தமிழலக்கியப் பாரம்பரியத்தில் நாடோடிப் பாடல்கள்,கிராமிய இலக்கியங்கள்,நாட்டுக் கூத்துக்கள்.வாய்மொழி இலக்கியம்,நாட்டார் பாடல்கள் என்பனவை கைகோர்து வளம் சேர்த்துள்ளன.சாதாரண படிப்பறிவில்லாத மொழித் தேர்ச்சியற்ற ஓரு காலத்தில் இசையும் மெட்டும் கூட்டி வார்த்தைகளை வரியாக்கி தாளம் தப்பாமல் கருத்தாழத்துடன் பாடல்களைப் படைத்த பாமரனின் வாழ்க்கை அலாதியானது.ஒவ்வொரு படைப்பும் ஒவு;வொரு செயலும் ஒவ்வொரு நிகழ்வும் இவர்களது எழுதா இலக்கியத்தின் ஒரு மைல் கல்லே!