செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தாய் மடியில் பிறந்து


மனிதன் பிறக்கும் போதும் அழுகின்hன்:இறக்கும் போதும் அழுகின்றான்! மறைந்த சந்திரபாபுவனி; குரலில் அழுத்தமான சிந்தனைகள். ஒரு விடயத்தை மனிதன் அதிகமாகக் கவரும் ஊடகத்தில் சொல்லிவிடுவது இலகுவானது!
அந்தக் காலத்தில் அறிவியல் உலகம் மனிதனை ஆக்கிரமித்துக் கொள்ளாத வேலையில் ஓய்வு நேரங்களையும்: உழைப்பு நேரங்களையும்: துயர நேரங்களையும் என தன் வாழ்வியலோடு அவன் எழுதா இலக்கியமான நாட்டார் பாடல்களை இலாவகமாகக் கையாண்டான்! இப் பாடல்களில் மனிதனின் வாழ்வில் நிலையாமையாகிய இவ் உடம்பு பிரியும்போது அவன் உறவுகள் படும் துயரங்களை 'ஒப்பாரிப் பாடல்களினூடாக' அவன் - அவள் -அவர்கள் தரும் பாடல்கள் இனிமையானவை என்பதை விட ஆழமான துயரங்களின் சாகரங்கள்!
செல்வி.நாகராஜ் நிசாந்தினியின் தொகுப்பில் ஒப்பாரிப் பாடல்களை 'தாய் மடியில் பிறந்து தாலாட்டு கேட்ட எம்மை அழைக்கிறான் தேவன்- அவன் உறவுகளை விட்டுச் செல்ல உடைழந்த மனதின் முடிவுரையாக அமைகின்றது இந்த ஒப்பாரி........................' முகவுரை தந்திரும் தொகுப்பாளினி இன்னும் நிறைய பாடல் தொகுப்புகளைத் திரட்டி மக்கள் கவனத்திற்குக் குறிஞ்சிப் பண்ணையினூடாகக் கொண்வரலாம்.
இங்கு பாருங்கள்!ஒப்பாரியில் அழகியல் நயத்தை! இதில் தான் எத்தனை தமிழ் நயம்? காலம் இளம் சிட்டுகளை இதில் லயிக்க வைக்காவிட்டாலும் இளம் சமூகத்தினரிடையே இப் பாடல்களும் அக்கால மக்களின் வாழ்க்கைச் சுவையையும் ரசித்து சுவைக்க வேண்டும்!

ஆசக்கி இளந்தோட்டம் - நம்ம வாச
ஆளில்லா பூந்தோட்டம்
அரும்பொடிக்கப் போகயில
ஒரு அழகு ரதம் கண்டியலா?

முருங்க இளந்தோட்டம் - நம்ம வாச
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
பூவொடிக்க போகயில
ஒரு பொண்ணு ரதம் கண்டியலா?
பொல்லாத எமனோட – நீங்க
போக வரம் கேட்டியலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக