சனி, 22 அக்டோபர், 2011

பழய சோறும் திங்கவில்ல


தேயிலைத் தேசத்திற்குள் தேயிலை வருவதற்கு முன்னாள் வந்த கோப்பிப் பயிரின் மலையக நாட்டார் பாடல்கள் தாராளமாகவே உள்ளன. எமது வாழ்க்கையில் நமக்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ தெரியவில்ழல! கோப்பியும் தேயிலையும் நமக்கான மூல வேர்! ஒரு வகையில் நாம் இந்த உலகில் எத்தனை மக்களை தாகசாந்தியைத் தீர்த்து புத்துணர்ச்சியும் கொடுக்கின்றோம்!

நமது விடியற்காலைப் பொழுதில் தோட்டத்தில் தரும் தேயிலையில் ஒரு 'பிளேன் டீ' குடித்துவிட்டு நமது பணி ஆரம்பமாகும். அந்த பிளென் டீயின் விலை என்ன ஒரு பத்து டூபாய் இருக்கும்! ஆனால், நமது உழைப்பினால் வந்த தேயிலை, கோப்பி பாணங்களை ஒரு சிறிய குவளை(சின்ன கிளாஸ்) ஒன்றை பிற தேசத்தினர் 50 டொலருக்கும் நூறு டொலருக்கும் சுவைக்கின்றார்கள்!அதுவும் தரமான 'பச்சைத் தேயிலை'
மூலமாக!

நமக்கு இதையெல்லாயம் ஆய்ந்தெடுப்பதற்கு மட்டுமே உரிமை! சுவைப்பதற்கல்ல! ஆனால் அந்த கோப்பி பயிர் செய்யும் போது வரும் பாடலை சுவைக்க நமக்கு உரிமை இருக்கிறது! ஏன் தெரியுமா? அது நமது உழைப்பு என்பதனால்!


கூணி அடிச்ச மலை
கோப்பிக் கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை
அந்தா தெரியுதடி!

கோப்பி பழுத்துருச்சி கொண்டு போக நாளாச்சி
சீமத் தொரைகளெல்லாம் சிரிக்கிறாங்க
பழமிருக்கு சாக்குலே பாத்துக்டி பத்தரமா
பசுமாங் கோப்பியிலே பழமெடுக்க நேரமாச்சு!

கங்காணி காட்டு மேலே
கண்டாக்கையா ரோட்டு மேலே
பொடியன் பழமெடுக்க
பொல்லாப்பு நோகுதய்யா!

பழமும் எடுக்கவில்ல
பழய சோறும் திங்கவில்ல
வீட்டுக்குப் போகவில்ல
வேகுதய்யா என் மனசு!

இடுபிலேயும் சாய சீலை
இருபுறமும் கோப்பி மரம்
அவசரமா புடுங்குறாளே
அடுத்த வீட்டு ராமாயி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக