திங்கள், 3 அக்டோபர், 2011

நீங்கள் கவிதை எழுதுபவரா?




நீங்கள் மலையகத்தைப் பிறப்பிடமாகவோ வாழிடமாகவோ கொண்டவரா? அப்படியாயின் உங்களுடைய கவிதைகளை மலையக இளம் கவிஞர்களின் கவிதைகள் பக்கத்தில் பதிப்பிக்கலாம்.

நீங்களோ உங்களுடைய நண்பர்களுக்கோ இவ் விடயம் தொடர்பாக அறியத்தரலாம்.

எங்களுடைய பக்கத்தில் கவிதையைப் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

1. நீங்கள் எமது நிரந்தர சந்தாதாரராக வேண்டும்.
2. அதற்கு எமது இணைய அஞ்சல் முகவரியுடன் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும்.
3. எமது முகவரி – ploges122@gmail.com
4. கவிதைகள் எவ்விதத் தலைப்புகளிலும் அமையலாம்.
5. கவிதைகள் இணைய முகவரியினூடாகவே அனுப்பப்படுதல் வேண்டும்.
6. அவை பாமினி எழுத்துக்களில் தட்டச்சு செய்யப்பட்டு வேர்ட் டொக்குயுமென்டாக இணைக்கப்படுதல் வேண்டும்.
7. ஆக்கங்கள் பிறருடைய களவாடல்களாக இருக்கக் கூடாது.
8. புகைப்படம் ஒன்றை இணைத்தல் வேண்டும்.
9. தங்களுடைய ஆக்கங்கள் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் பிரசுரம் செய்யப்படும்.
10. எமது இணைய முகவரிக்கு உங்களுடைய வேண்டுதல் கடிதம் கிடைக்கப்பெற்றதும் விண்ணப்பப் படிவம் தங்களுடைய இணைய முகவரிக்கோ அல்லது தங்களால் குறிப்பிடப்படும் இணைய முகவரிக்கோ அனுப்பி வைக்கப்படும்.
11. அத்துடன் நிரந்தர சந்தா தொடர்பான மேலதிக விபரங்கள் இணைக்ப்படும்.
12. ஆக்கங்களுக்கான முழு பொறுப்பையும் படைப்பாளியும் அவரால் முன் வைக்கப்படும் சிபாரிசுக் காரர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.


மலையக இளைய தலைமுறையினரை உலகளவில் இணையப் பதிவுகளினூடாக இணைத்துக் கொள்ளும் முயற்சியில் உங்களுடைய ஆலோசனைகளையும் படைப்புக்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

நன்றி.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக