புதன், 14 செப்டம்பர், 2011

வாசலிலே


நாட்டார் பாடல்களில் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதுபோல பக்திக்கும் அது நிறைவாகவே வழிசமைத்துள்ளது. மலையக மக்கள் வாழ்க்கையில் சிறு தெய்வ வழிபாடும் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாக உள்ளதை நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.
நாகராஜ் நிசாந்தினி ;மாரியம்மன் தாலாட்டையும் கும்மியையும்;' அறிமுகம் செய்யும்போது அதை அழகாக இவ்வாறு விழித்துப்போகின்றார்.' படைத்த மனிதனை பக்குவமாய்ப் பாதுகாக்க பாசத்தால் படைத்தான் தாயை....... வளர்ந்த மனிதனை வளமாய் ஆக்கிட வரவழைத்தான் தந்தையை ஆனாலும் கூட ஆண்டவனை மறக்க முடியாது:அவனால் படைக்கப்பட்ட எம்மைப் போன்ற ஜீவன்களுக்கு ........ ஒரு வாய்ப்பாக...' என இதனைக் குறிப்பிடுகின்றார்.

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே

மல்லிக முல்லரும்பா மலராத காயரும்பா
மணந்து மணக்குதிங்க தன்னானே – தானே
மாரியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

செம்புக முல்லரும்பா செவராத காயரும்பா
செவந்து மணக்குதிங்க தன்னானே – தானே
செல்லியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தூண்டாமணி விளக்கு தூண்டத்தான் நின்னெரியும்
தூண்டாட்டியும் நின்னெரியும் தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலில தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலிலே தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக