வெள்ளி, 7 அக்டோபர், 2011

கண்டிச் சீமை


அட்டே கடியும்
அரிய வழி நடையும்
கட்டே எடறுவதும்
காணலாம் கண்டியிலே

ஆளும் கட்டும் நம்ம சீமை
அரிசி போடும் நம்ம சீமை
சோறு போடும் கண்டிச் சீமை
சொந்தமினு எண்ணாதீங்க.


இரத்தத்தை உரிஞ்சும் அட்டையின் கடியும் பொருத்தமற்ற பாதையில் கால்நடையாகச் செல்லும்போது கட்டைகளால் கால் இடறுவதும் இந்தக் கண்டிச் சீமையிலே காணலாம் என்று வேதனையுடன் இந் நாட்டார்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

வேலைக்கென்று ஆட்களைக் கொண்டுவருகின்ற இந்த கண்டிச் சீமை அரிசி நன்றாக கிடைக்கும் ஊர்.நமக்கு உண்பதற்குச் சோறு எல்லாம் தரும்.ஆனால் இந்தக் கண்டிச் சீமையை சொந்தம் என்று மட்டும் நம்பிவிடவேண்டாம் என்று என்றோ ஒருநாள் வழிவழியாக வந்த நாட்டார் பாடல் நமக்கு உள்ளதை உள்ளவாறு உரைத்து உண்மையைப் புகற்றியிருப்பது எவ்வளவு அறிவுபூர்வமான விடயம் பார்த்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக