திங்கள், 10 அக்டோபர், 2011

நாட்டார் பாடல்களில் சோகங்களையும் அடிமைத் தனத்தையும் உள்ளபடி சொல்வதற்கு மக்கள் பயன்படுத்திய வடிவம் சில வேளைகளில் ஒப்பாரிப் பாடலாகாகவும் இருக்கின்றது. சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது வெறுக்கப்பட்ட ஒர இனமாக இந்தியாவில் தலித்துகள் இருப்பதைக் காணலாம். இவர்களது வாழ்வின் சோகங்கள் எல்லையற்றவை!

தற்போது அந்த நிலையிலிருந்து அவர்கள் சிறிது மாறி வருவதைக் காணலாம். அந்தச் சமூகத்தின் வாழ்க்கையில் குடிநீரைப் பெறுவதற்குக் கூட உள்ள நிலைமையை இப் பாடல் சித்தரிக்கின்றது. சாதாரணமாக நம் ஊரில் உள்ள ஆடு.மாடு,நாய்கள் கூட அருந்தும் குளம்,குட்டை,ஆறு என்பவற்றில் கூட அவர்களுக்கு நீர் அருந்தச் சுதந்திரமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது.


கொடல பொறட்டுதுன்னு – நான்
குடிக்க ஜலம் கேக்கப் போனேன்
குடிக்க ஜலம் இல்லேன்னு
கொளத்துத் தண்ணீர் தூரமின்னான்

வவுத்த பொறட்டுதுன்னு
வடித்த ஜலம் கேட்கப் போனேன்
வடிச்ச ஜலம் இல்லேன்னு – எனக்கு
வாய்க்காத் தூரமின்னான்


மொத்தத்தில் அவனுக்குத் தண்ணீர் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை என்பதை இப்பாடல் காட்டுகின்றது. உலகின் நாகரீகமாக மிளிரும் மனித இனத்திலும் எத்தனை சாதிக் nஅகாள்கைகள்? தீண்டாமைக் கொள்கைகள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக